தற்போது இங்கிலாந்தில் முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக லெஜென்ஸ் சாம்பியன்ஷிப் டி20 லீக் நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் இன்று அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான மிக முக்கியமான ஆட்டத்தில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் சவுத் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சாம்பியன்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இன்றைய போட்டிக்கான தாசில் வெற்றி பெற்ற இந்தியா சாம்பியன் அணி கேப்டன் யுவராஜ் சிங் தங்கள் அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். சவுத் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் மெக் லேரன் 13 பந்தில் 20 ரன், ஸ்னிமேன் 43 பந்தில் 73 ரன்கள் எடுத்தார்கள்.
சவுத் ஆப்பிரிக்கா அணியின் ரிச்சர்ட் லெவி அதிரடியாக விளையாடி வெறும் 25 பந்துகளில் 65 ரன்கள் கொடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சவுத் ஆப்பிரிக்கா அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தரப்பில் ஹர்பஜன்சிங் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களுக்கு 25 ரன்கள் மட்டும் விட்டு தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இந்த நிலையில் 153 ரன்கள் எடுத்தால் கூட இந்தியா சாம்பியன்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்கின்ற நிலையில் ரன் ரேட் அமைந்திருந்தது. சவுத் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி இந்தியாவை அதற்குள் மடக்கினால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்று அந்த அணிக்கும் இருந்தது.
இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக முக்கிய வீரர்கள் ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, கேப்டன் யுவராஜ் சிங், நமன் ஓஜா மற்றும் அம்பதி ராயுடு என முக்கிய ஐந்து விக்கெட்டுகள் 77 ரன்களுக்கு விழுந்துவிட்டது. இதன் காரணமாக இந்திய அணியின் மேல் பெரிய அழுத்தம் உருவானது.
இந்த நிலையில் யூசுப் பதான் மற்றும் இர்பான் பதான் இருவரும் சேர்ந்து சிறப்பாக அணியை மீட்க ஆரம்பித்தார்கள். இந்த ஜோடி 40 பந்துகளில் 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இருந்தது. அந்த நிலையில் யூசுப் அதான் தவறின் காரணமாக இர்பான் பதான் 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக மீண்டும் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து யூசுப் பதான் மற்றும் பவான் நெகி இருவரும் சேர்ந்து 11 பந்துகளில் 23 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதில் கடைசிப் பந்துக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில் யூசுப்பதால் பவுண்டரி அடிக்க, இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 153 ரன்கள் தேவை என்கின்ற நிலையில் ஆறு விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து அரையிறுதிக்குள் நுழைந்தது. யூசுப் பதான் சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 44 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : 87 ரன் 10 விக்கெட்.. வாய்விட்டு சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. வச்சு செய்யும் பாஸ்பால் இங்கிலாந்து.. பரபரப்பான முதல் டெஸ்ட்
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேற, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் வெளியேறி இருக்கின்றன. இதில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரையிறுதியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது!