இன்று முன்னாள் வீரர்கள் பங்குபெறும் உலக லெஜென்ஸ் சாம்பியன்ஷிப் டி20 தொடர் இங்கிலாந்து பர்மிங்காம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையே தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கான நாட்டில் வெற்றி பெற்ற இந்தியா சாம்பியன்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ் சிங் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு துவக்க வீரராக வந்த கேப்டன் கெவின் பீட்டர்சன் 9 பந்தில் 4 ரன், முஸ்டார்ட் 24 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு இயான் பெல் 44 பந்தில் 59* ரன்கள், சமித் படேல் அதிரடியாக 25 பந்தில் 51 ரன்கள், ஓவைஸ் ஷா 9 பந்தில் 23* ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து சாம்பியன் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 165 ரன்கள் எடுத்தது. இந்தியா சாம்பியன்ஸ் அணியின் தரப்பில் ஹர்பஜன் சிங் 3 ஓவர்களுக்கு 16 ரன்கள் தந்து 2 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா அதிரடியாக 32 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் நமன் ஓஜா தன் பங்குக்கு 20 பந்தில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு துவக்க ஜோடி நல்ல பாட்னர்ஷிப்பை உருவாக்கி தந்தது.
இதைத்தொடர்ந்து வந்த சுரேஷ் ரெய்னா 17 பந்தில் 16 ரன்கள், கேப்டன் யுவராஜ் சிங் 5 பந்தில் 2 ரன்கள், குர்கீரத் சிங் 17 பந்தில் 33 ரன்கள், இர்பான் பதான் 15 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்கள். யூசுப் அதான் ஆட்டம் இழக்காமல் ஐந்து பந்தில் 5 ரன்கள் எடுக்க, ஹர்பஜன்சிங் சிங் தான் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸர் அடித்து இந்தியா சாம்பியன்ஸ் அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஒரு ஓவர் மீதம் இருக்கும் பொழுது வெற்றி பெற வைத்தார்.
இதையும் படிங்க : அர்ஸ்தீப் சிங்குக்கு இவ்வளவு மார்க் கொடுப்பேன்.. ஆனா அவர் வாழ்க்கையில் அதை யோசிக்கணும் – வாசிம் அக்ரம் பேட்டி
இங்கிலாந்து தரப்பில் கிரீஸ் சோஃபீல்ட் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களுக்கு 33 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனாலும் யூசுப் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் சேர்ந்து வெற்றிக்குத் தேவையான ரன்னை எளிதாக அடித்து விட்டார்கள். மேலும் இந்தத் தொடர் இங்கிலாந்தில் வைத்து நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது!






