அர்ஸ்தீப் சிங்குக்கு இவ்வளவு மார்க் கொடுப்பேன்.. ஆனா அவர் வாழ்க்கையில் அதை யோசிக்கணும் – வாசிம் அக்ரம் பேட்டி

0
444
Akram

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரை தென் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று இந்திய அணி கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணிக்கு சிறந்த பந்துவீச்சாளராக அர்ஸ்தீப் சிங் இருந்தார். இவரது பந்து வீச்சுக்கு லெஜன்ட் வாசிம் அக்ரம் பத்துக்கு இத்தனை மதிப்பெண்கள் வழங்குவேன் எனக் கூறியிருக்கிறார்.

நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அர்ஸ்தீப் சிங் மொத்தம் 8 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றியவராக வந்தார். மேலும் t20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இந்திய பந்துவீச்சாளர் கைப்பற்றிய அதிகபட்ச விக்கெட் இதுவாகும்.

- Advertisement -

மேலும் இந்திய அணிக்கு ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தேவையாக இருந்த நிலையில் தந்தை இருபுறமும் ஸ்விங் செய்யும் திறமை பெற்றவராக இருக்கிறார். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீச முடிந்தவராகவும் இருக்கிறார்.எனவே இவரது தேவை இந்திய அணிக்கு அதிகமாகவே இருக்கிறது.

இந்த நிலையில் தன்னைப் போலவே இடதுகை வேகப்பந்துவீச்சாளராகவும், பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யக் கூடியவராகவும், மேலும் தேவையான நேரங்களில் யார்க்கர் வீசக்கூடியவராகவும் இருக்கும் அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சு பற்றியும் அவர் எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் வாசிம் அக்ரம் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறும் பொழுது “அர்ஸ்தீப் சிங் மிகவும் ஈர்க்கக்கூடிய திறமை படைத்தவர். அதே சமயத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால்அவருக்கு நல்ல ஸ்விங் மற்றும் வேகம் இருக்கிறது.புதிய பந்தில் நல்ல முறையில் செயல்படுகிறார்.அவரும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் கவனம் வைத்திருக்கிறார் என நம்புகிறேன்.

என்னதான் இருந்தாலும் நீங்கள் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்ல வேண்டும், நீங்கள் விளையாடி ஒரு பத்து, இருபது வருடங்கள் தாண்டிய பிறகும் நீங்கள் பலரது ஞாபகத்தில் இருக்க வேண்டும் என்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் விளையாடி சிறப்பானதை செய்திருக்க வேண்டும். அவருக்கு அதற்கான திறமை இருக்கிறது. எனவே அவர் அதையும் செய்வார் என்று நம்புகிறேன். அவருடைய பந்துவீச்சுக்கு நான் பத்துக்கு எட்டு மதிப்பெண்கள் கொடுக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -