இந்திய கிரிக்கெட்

2027 WC பக்கத்துல வருது.. அதுக்குள்ள இந்த ரெண்டு விஷயங்களை நாங்கள் சரி செஞ்சு ஆகணும் – இந்திய கேப்டன் பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 351 ரன்கள் எடுத்தும் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஷாய் ஹோப் 162 ரன்கள் விளாசி வெஸ்ட் இண்டீஸ் அணியை 352 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்ய வைத்தார். இதன் மூலம் இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றினாலும், இந்த போட்டியில் சில முக்கியமான குறைகள் வெளிப்பட்டுள்ளன.

- Advertisement -

குறிப்பாக இந்திய அணியின் பீல்டிங்கில் கேட்ச்கள் தவறவிடப்பட்டது மற்றும் கடைசி ஓவர்களில் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. உலகக் கோப்பை 2027 இன்னும் ஒரு வருடத்தில் நடைபெற உள்ள நிலையில், இதுபோன்ற தவறுகளை இந்திய அணி உடனடியாக சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொடரை வென்றிருந்தாலும், கேப்டன் ஷுப்மன் கில்லும் இதை வெளிப்படையாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து ஷுப்மன் கில் கூறும்போது, “தொடரில் நிறைய விஷயங்கள் நன்றாக நடந்திருக்கிறது. ஆனால் இன்னும் சில விஷயங்களில் நாங்கள் முன்னேற வேண்டும். எங்களுடைய பீல்டிங் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். தொடரில் சுமார் 6 அல்லது 7 கேட்ச்களை தவறவிட்டோம். உலகக் கோப்பையை எதிர்நோக்கும் நேரத்தில் இது நல்ல அறிகுறி கிடையாது. அதேபோல் டெத் ஓவர்களில் நாங்கள் அட்டாக் செய்கிறோமா அல்லது டிஃபென்ட் செய்கிறோமா என்பதில் சில நேரங்களில் தெளிவு இல்லை. இதுபோன்ற விஷயங்களை நிச்சயம் சரி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -
Published by

Recent Posts