வார்னர் சொல்றது குழப்பமா இருக்கு.. எங்க டீமுக்கு இந்த பிரச்சனை இருக்குறனால அவர் அங்கதான் பேட்டிங் வரணும்- ஆஸி லபுஷேன் கருத்து

0
189

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதத்தில் இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தனது சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது. இதற்காக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தயாராகி வரும் சூழ்நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார்.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன மார்னஸ் லபுஷேன் டேவிட் வார்னர் குறித்தும் ஸ்டீவ் ஸ்மித் குறித்தும் சில முக்கிய கருத்துக்களை கூறி இருக்கிறார்.

- Advertisement -

டேவிட் வார்னரின் விருப்பம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சமீபத்தில் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் தனது ஓய்வினை அறிவித்தார். இந்த சூழ்நிலையில் அவரது தொடக்க இடம் காலியாக இருந்த நிலையில் அவருக்கு பதிலாக நான்காவது இடத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் தொடக்க இடத்தில் களமிறக்கப்பட்டார். ஆனால் அவருக்கு மிடில் வரிசையை விட தொடக்க வரிசை சரியாக அமையவில்லை.

இதனால் திரும்பவும் அவர் மிடில் வரிசைக்கு பேட்டிங் செய்வார் என்று ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் அறிவித்திருந்தார். மேலும் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலக, சற்று சிக்கலில் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு கை கொடுக்கும் விதமாக டேவிட் வர்னர் தனது ஓய்வு முடிவினை திரும்ப பெற்று ஆஸ்திரேலிய நிர்வாகம் விரும்பினால் தான் மீண்டும் டெஸ்ட் தொடரில் விளையாட விரும்புவதாக தனது விருப்பத்தை கூறியிருந்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கருத்து

இந்த சூழ்நிலையில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்த மார்னஸ் லபுசேன் “அவர் சீரியஸாக இருந்தாரா அல்லது நகைச்சுவைக்காக சொன்னாரா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இது போன்று சொல்வது என்பது மிகவும் கடினம். அது குறித்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. ஆஸ்திரேலியா அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் வெற்றி பெற்ற இடத்தில் பேட்டிங் செய்வது என்பது மிகவும் எளிதானது.

இதையும் படிங்க:58/8 to 189.. ரூதர்போர்டு மீட்ட வெஸ்ட் இண்டீஸ்.. விடாது அசத்திய இலங்கை அணி.. தொடரை கைப்பற்றியது

காயம் காரணமாக வெளியேறிய கேமரூன் கிரீன் கோடைகாலத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு கிடைக்க மாட்டார். தற்போது இருக்கும் ஆஸ்திரேலியா அணியில் நான்காவது இடத்திற்கு பொருத்தமாக பேட்டிங் செய்யக் கூடிய வீரர் இல்லை. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு அந்த இடத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தவர் ஏன் திரும்பவும் பேட்டிங் செய்யக்கூடாது. எனவே அவர் பேட்டிங் செய்வதை சரியானது” என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -