முக்கியமான போட்டியில் இந்தியாவால் அழுத்தத்தை சமாளிக்க முடியாது- முகமது ஹபிஸ் உள்குத்து!

0
46
Hafeez

இந்திய அணி குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பொதுவான ஒரு கருத்தாக இந்திய அணி முக்கியமான போட்டிகளில் சரியாக செயல்படாது என்கின்ற கருத்து பல ஆண்டுகளாக இருந்து வருகிறது!

மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்த காலகட்டத்தில் மட்டுமே இந்திய அணியின் மீது இப்படியான கருத்துக்கள் ஓய்ந்திருந்தது. அவர் தனது கேப்டன்ஷியில் மூன்று ஐசிசி தொடர்களை வென்று இப்படியான கருத்துக்களுக்கு இடம் அளிக்காமல் பார்த்துக் கொண்டார்!

- Advertisement -

ஆனால் விராட் கோலியின் கேப்டன்சியில் 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனல், 2019 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதி, 2021 டி20 உலகக்கோப்பை தொடர் என முக்கியமான போட்டிகளில் தோற்று இந்திய அணி வெளியேறி இருந்தது.

விராட் கோலிக்கு அடுத்து ரோகித் சர்மா வந்ததற்கு பின்னாலும் இப்படியான நிலையே இந்திய அணிக்கு தொடர்கிறது. ரோகித் சர்மா கேப்டன்ஷியில் டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியிருந்தது. இதேபோல் விராட் கோலி தலைமையிலும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்று இருந்தது. நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் தோற்றது.

இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் ” ஐசிசி நாட் அவுட் போட்டிகளில் விளையாடும் பொழுது உண்டாகும் அழுத்தத்தை விவரிக்க முடியாது. முக்கிய நிகழ்வுகளில் இந்திய அணியால் இப்படியான அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை. இதனால் நெருக்கடியான ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியை தழுவியது. கடந்த டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அரை இறுதியில் தோல்வி அடைந்தது. 2017 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானிடம் இறுதிப் போட்டியில் தோற்றது. இந்தியாவைப் பொறுத்த வரையில் இது ஒரு பின்ச்சிங் பாயிண்ட். இந்தியா இப்பொழுது நிரூபிக்க ஒரு விஷயம் இருக்கிறது. அவர்கள் வந்து ஐசிசி போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் பாகிஸ்தான அணியின் உலகக் கோப்பை வாய்ப்புகள் குறித்து பேசிய அவர் “பாகிஸ்தானுக்கு வாய்ப்புகள் இருக்கிறது. அவர்கள் உலகின் பல்துறை மற்றும் பந்து வீச்சில் ஆபத்தான ஒரு அணியாகும். வேகப்பந்துவீச்சாளர்களைப் பார்த்தால் அவர்கள் அந்த அணியின் மேட்ச் வின்னர்கள்தான். ஷாகின் அப்ரிடியை எடுத்துக் கொண்டால் அவர் முழு உடல் தகுதியில் இருந்தால் உலகம் முழுவதும் அவர் விளையாடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறது. சுழல் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் சதாப் கான், இமாத் வாசிம், முகமது நவாஸ் ஆகியோர் இருக்கிறார்கள்!” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசியவர் “உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாடும் பொழுது பாகிஸ்தான் அணிக்கும் பெரிய அழுத்தம் இருக்கும். எவ்வளவு வேகமாக இருக்கிறார்கள் அழுத்தத்தை சமாளிக்க டிரஸ்ஸிங் ரூம் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை பொறுத்து பாகிஸ்தான அணி மிக சிறப்பாக செயல்படும்!” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -