189 ரன் கூட்டணி.. திடீரென வந்து ருதுராஜுக்காக சதமடித்த இஷான் கிஷான்.. தமிழக இந்திரஜித் அசத்தல்.. துலீப் டிராபி 2024

0
489
Ruturaj

2024 திலீப் டிராபி தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் ஒரு போட்டியில் இந்தியா பி அணிக்கு எதிராக இந்தியா சி அணிக்காக திடீரென களம் இறங்கிய இஷான் கிஷான் அதிரடியாக சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியும் ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியும் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அபிமன்யு ஈஸ்வரன் முதலில் தங்கள் அணி பந்து வீசும் என அறிவித்தார்.

- Advertisement -

சர்ச்சையான போட்டி

இன்று இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், இந்த போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படாதது பெரிய சர்ச்சையாக மாறிக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய பி அணிக்காக களம் இறங்கிய கேப்டன் ருதுராஜ் முதல் பந்தில் பவுண்டரி அடித்து இரண்டாம் பந்தில் காயம் அடைந்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த தமிழகத்தின் சாய் சுதர்சன் மற்றும் ரஜத் பட்டிதார் இருவரும் சேர்ந்து 93 ரன்கள் அதிரடியாக பார்ட்னர்ஷிப் அமைப்பு அசத்தினார்கள். அதே சமயத்தில் இருவரும் அடுத்தடுத்து ரஜத் பட்டிதார் 40, சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

கலக்கிய இஷான் கிஷான் மற்றும் பாபா இந்திரஜித்

இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பாக்காத வகையில் இன்றைய போட்டியில் ருதுராஜ் அணிக்காக களம் இறங்கிய இஷான் கிஷான் மிகச்சிறப்பான முறையில் அதிரடியாக விளையாடினார்.இன்னொரு முனையில் அவருக்கு தமிழகத்தின் பாபா இந்திரஜித் சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்தார்.

இந்த ஜோடி பொறுப்பாகவும் அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் சதம் அடித்தார். இறுதியாக இஷான் கிஷான் 126 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 111 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மேலும் இந்த ஜோடி 189 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதையும் படிங்க : தென் ஆப்பிரிக்க வரலாற்று தொடர்.. ஆப்கான் அணி அறிவிப்பு.. ரஷித் கான் வருகை.. ரிவென்ச் நடக்குமா?

இதற்கு அடுத்து பாபா இந்தரஜித் 78 ரன்கள் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து காயம்பட்டிருந்த கேப்டன் ருதுராஜ் விளையாட வந்தார். இன்று முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்தியா சி அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்திருக்கிறது. ருதுராஜ் தற்பொழுது 46 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார். முகேஷ் குமார் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -