தென் ஆப்பிரிக்க வரலாற்று தொடர்.. ஆப்கான் அணி அறிவிப்பு.. ரஷித் கான் வருகை.. ரிவென்ச் நடக்குமா?

0
35
Afghanistan

ஆப்கானிஸ்தான் முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை சார்ஜாவில் நடத்துகிறது. தற்போது இந்த தொடருக்கான அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அறிவித்திருக்கிறது.

சமீபத்தில் ஆண்டுகளில் ஆசிய கண்டத்தில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளை தாண்டி ஆப்கானிஸ்தான் அணி மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

2024 டி20 உலகக் கோப்பை

கடந்த மாதங்களில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர்களது நாட்டில் மிகப்பெரிய திருவிழா கொண்டாட்டம் உருவானது.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் வலிமையான பந்துவீச்சு தாக்குதலை வைத்திருந்த தென் ஆப்பிரிக்க அணியிடம் சிக்கி பரிதாபமாக தோற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இந்த நிலையில் அதற்கு பதிலடி தரும் விதமாக நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி செயல்பட விரும்பும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

ரஷித் கான் மறு வருகை

ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி ஆரம்பித்து 22ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் அணிக்கு ரஷித் கான் மீண்டும் திரும்ப வந்திருக்கிறார். முஜீப் உர் ரஹ்மான் இடம்பெறவில்லை.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி :

ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கே), ரஹ்மத் ஷா (து. கே), ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கீ), இக்ரம் அலிகில் (வி. கீ), அப்துல் மாலிக், ரியாஸ் ஹசன், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பதீன் நபி, ரஷித் கான், நங்யால் கரோட்டி, அல்லா முகமது கசன்ஃபர், ஃபசல் ஹக் ஃபரூக்கி, பிலால் சாமி, நவீத் ஜத்ரான் மற்றும் ஃபரித் அகமது மாலிக்.

- Advertisement -