சச்சின் சேவாக்கை விட இவர்தான் சிறந்தவர்.. பாகிஸ்தான் வீரர் கருத்துக்கு மன்னிப்பு கேட்ட முன்னாள் வீரர்கள் – சுவாரசிய சம்பவம்

0
73
Sachin

இந்தியா அணியின் நட்சத்திர முன்னாள் தொடக்க ஆட்டக்காரர்கள் சச்சின் மற்றும் சேவாக்கை விட அகமது சேஷாத் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஃபர்கான் ஒரு நிகழ்ச்சியில் தேர்வு செய்திருந்தார். தற்போது இதற்கு பாகிஸ்தான் முன்னால் வீரர்கள் பஷீத் அலி மற்றும் கம்ரன் அட்மின் இருவரும் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்கள்.

கடந்த வருடம் இறுதியில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பான பேட்டிங்கை தொடக்க ஆட்டக்காரர் பர்கான் வெளிப்படுத்தியிருந்தார். மேலும் அவர் இந்திய அணிக்கு எதிராக அரை சதம் அடித்த பிறகு செய்த கொண்டாட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

- Advertisement -

நகைச்சுவையான தேர்வு

பர்கான் ஒரு கிரிக்கெட் நிகழ்வில் கலந்து கொண்ட பொழுது அவரிடம் ஒருவரை விட ஒருவர் யார் சிறந்தவர் என்கின்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் பர்கான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக்கை தாண்டி சிறந்த பேட்ஸ்மேனாக அகமத் சேஷாத்தை தேர்ந்தெடுத்தார்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமத் சேஷாத் மொத்தம் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் சேர்த்து 5058 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். தான் அவரைப் பார்த்து கிரிக்கெட் விளையாட விரும்பியதாகவும் அதனால் அவரை தேர்வு செய்வதாகவும் பர்கான் கூறியிருந்தார். இது பாகிஸ்தான் தரப்பிலேயே கடுமையான கேலிக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்

இது குறித்து தனது யூடுப் சேனலில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பஷித் அலி கம்ரன் அக்மல் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இதற்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் பொழுது ” நான் பர்கானை சந்தித்தால் அன்றைய நாளில் அவர் முழு சுயநினைவோடு இருந்தாரா என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அது ஒரு கொடூரமான நகைச்சுவை சம்பவம்”

இதையும் படிங்க : நியூசிலாந்து வேற லெவல் பிளான் பண்ணி இருந்தாங்க.. இதுதான் ஜெயிக்க காரணம் – ஜாகிர் கான் பேச்சு

“எப்படி சச்சின் சேவாக்கை தாண்டி அகமத் சேஷாத்தை தேர்வு செய்ய முடியும். நிச்சயம் இது போலியான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இதற்காக நாங்கள் இருவரும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -