தற்போது யுனைடெட் அரபு எமிரேடில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி இடம்பெற்று இருக்கும் பிரிவில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்த ஐந்து அணிகளில் இரண்டு அணிகள் அரை இறுதிக்கும் முன்னேறும். இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்திருக்கிறது. எனவே அடுத்து எல்லா போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி
இந்த நிலையில் இன்று முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் தைரியமாக பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு நிதா தர் அதிகபட்சமாக 34 பந்தில் 28 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் முனீபா அலி 26 பந்தில் 17 ரன்கள் எடுத்தார்.
இறுதியாக பங்களாதேஷ அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் அருந்ததி ரெட்டி 3, ஸ்ரேயங்கா பட்டில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இந்திய அணி வெற்றி
இலக்கை வேகமாக துரத்தி வெற்றி பெற்று நல்ல ரன் ரேட்டை பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணிக்கு துவக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 16 பந்தில் 7 ரன்கள், அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா 35 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதைத்தொடர்ந்து ஜெமிமா 28 பந்தில் 23 ரன், கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 24 பந்தில் 29 ரன் எடுக்க இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 18.5 ஓவரில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல்இதையும் படிங்க : முதல் டி20.. கம்பீர் வைத்த மெகா டிவிஸ்ட்.. உருவாகும் இன்னொரு டி20 அணி.. 2 வீரர்கள் அறிமுகம்.. ரசிகர்கள் உற்சாகம்
மேலும் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டுமென்றால், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளை வெல்வது மட்டுமில்லாமல், நல்ல ரன் ரேட்டில் வெல்ல வேண்டும். அதே சமயத்தில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை வெல்ல வேண்டும் இல்லை மீதமிருக்கும் ஆட்டங்களில் எல்லாம் நியூசிலாந்து அணி தோற்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று நடக்கும் பொழுது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.