தற்போது இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்திருக்கும் 10 கட்டுப்பாடுகள் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் இயான் ஹீலி பேசி இருக்கிறார்.
தற்போது உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் அதிகாரம் மையமாக இருந்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஒன்றாக இணைந்து செயல்படாத விதத்தில் அதிருப்தி அடைந்தது. இதன் காரணமாக வீரர்களை ஒன்றாக சேர்த்து வைத்து கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கு பத்து விதிகளை கொண்டு வந்திருக்கிறது.
பிசிசிஐ மைய நோக்கம்
இந்திய கிரிக்கெட் வாரியம் தற்பொழுது இரண்டு விஷயங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்திய வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடாத பொழுதும், காயம் ஏதும் இல்லாத பொழுதும் கட்டாயம் யாராக இருந்தாலும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று விரும்புகிறது. இதன் மூலம் வீரர்களை நல்ல பார்மில் வைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறது.
இதைத்தொடர்ந்து வீரர்கள் எப்பொழுதும் ஒன்றாக இருப்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. இதன் காரணமாக ஒரே ஹோட்டலில் தங்குவது, ஒரே பேருந்தில் பயணிப்பது, பயிற்சி குறிப்பிட்ட வீரருக்கு சீக்கிரத்தில் முடிந்தாலும் அணிவுடன் சேர்ந்து வெளியேறுவது என்று சில கட்டுப்பாடுகளை அணி ஒற்றுமைக்காகவும் கொண்டு வந்திருக்கிறது.
பிசிசிஐ தவறை ஒப்புக்கொள்கிறார்கள்
இதுகுறித்து இயான் ஹீலி பேசும் பொழுது ” தற்போது இந்திய கிரிக்கெட்டின் மறு வடிவமைப்பு, இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைகள், இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் தங்கள் தேசிய அணியின் ஒழுக்கத்தை மோசமாக தவற விட்டு விட்டதை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார்கள்”
இதையும் படிங்க : இந்தியா டி20.. இந்த 2 மாற்றம் செய்யப் போறோம்.. இந்த வழியில் ஆடுவோம் – கோச் பிரண்டன் மெக்கலம் பேட்டி
“இதில் நிர்வாகமும் வீரர்களும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கனவை அவமதித்திருக்கலாம். இதன் காரணமாகவே தற்பொழுது அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இது ஆஸ்திரேலியா மற்றும் பிற அணிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகவே அமைகிறது. இதைப் பார்த்து மற்ற கிரிக்கெட் வாரியங்களும் சுதாரித்துக் கொள்ளலாம்” என்று கூறி இருக்கிறார்.