நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி வெஸ்ட் இண்டீஸ் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய இந்திய பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால் எளிதான வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா 13 பந்தில் 8 ரன், விராட் கோலி 24 பந்தில் 24 ரன், ரிஷப் பண்ட் 11 பந்தில் 20 ரன், சிவம் துபே 7 பந்தில் 10 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இந்திய அணி 11ஓவர்களில் 90 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. இந்த நிலையில் ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடிய 37 பந்தில் 60 ரன் பாட்னர்ஷிப் அமைத்தார்கள். சூரியகுமார் யாதவ் 28 பந்தில் 53 உடன், ஹர்திக் பாண்டியா 24 பந்தில் 32 ரன், அக்சர் படேல் 6 பந்தில் 12 ரன் எடுத்தார்கள். 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பஸருல்லா பரூக்கி மற்றும் ரஷித் கான் பல மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.
இது தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 11 ஓவர்களில் 71 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. எதிர்பார்க்கப்பட்ட குர்பாஸ் 8 பந்தில் 11 ரன், இப்ராகிம் ஜட்ரன் 11 பந்தில் 8 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் தந்தார்கள். அசமத்துல்லா ஓமர்சாய் மட்டும் தாக்குப் பிடித்து 20 பந்தில் 26 ரன்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பும்ரா நான்கு ஓவர்கள் பந்துவீசி 7 ரன்கள் மட்டும் விட்டு தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். டி20 கிரிக்கெட்டில் அவருடைய சிறந்த பந்துவீச்சு இதுவாகும். இந்த போட்டியில் பும்ரா மொத்தம் 20 டாட் பந்துகள் வீசினார். மீதம் நான்கு பந்துகளில் மட்டும் ஏழு ரன்கள் கொடுத்திருக்கிறார். மேலும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த எக்கனாமி பவுலராக பும்ராவே இருக்கிறார்.
இதையும் படிங்க : 181 ரன்.. யுவராஜ் சிங் சாதனையை உடைத்து காப்பாற்றிய சூர்யா.. ரோகித் புள்ளி விவரங்களுக்கு எதிராக எடுத்த முடிவு
மேலும் இந்திய அணியின் தரப்பில் அர்ஸ்தீப் சிங் 3, குல்தீப் யாதவ் 2, அக்சர் படேல் 1, ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். மேலும் ஐசிசி தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்ததில்லை என்ற பெருமையையும் தக்க வைத்திருக்கிறது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தி இருக்கிறது. மேலும் தனது இரண்டாவது போட்டியில் நாளை மறுநாள் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.