தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் அசாம் கவுகாத்தி மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த நிலையில் காயமடைந்த சுப்பன் கில் இடத்தில் யார் விளையாடுவார்கள் என்பது குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் சூசகமாக தெரிவித்திருக்கிறார்.
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 124 ரன்களை துரத்த முடியாமல் 30 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இருக்கிறது. இதன் காரணமாக தற்பொழுது இந்திய அணியின் மீது நிறைய அழுத்தம் நிலவுகிறது.
கேப்டன் கில் இல்லை
தற்போது கழுத்தில் காயம் அடைந்திருக்கும் இந்திய கேப்டன் சுப்மன் கில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு 99சதவீதம் வாய்ப்புகள் கிடையாது. இதன் காரணமாக மிக முக்கியமான அவருடைய நான்காவது இடத்தில் யார் விளையாடுவார்கள்? என்கின்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவருடைய இடத்தில் துருவ் ஜுரல் களமிறங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் மாற்றங்கள் இருக்கும் என்பதால் அந்த இடத்திற்கு யார் வருவார்கள்? என்று தெரியாத நிலை காணப்படுகிறது.
கில் இடத்திற்கு யார்?
இது குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் கூறும் பொழுது ” கில் இடத்தில் கடந்த டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரல் விளையாடினார். எனவே அவரே தொடர்ந்து விளையாடுவது நமக்கு ஒரு வழியாக இருக்கும். ஆனால் கில் பற்றி நமக்கு இன்னும் இறுதி முடிவு எதுவும் கிடைக்கவில்லை. எனவே அவருடைய இடத்தில் யார் விளையாடுவார்கள் என்று இப்போது பேசுவதில் எந்தவித அர்த்தமும் இருக்காது என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க : விராட் கோலிக்கு விரித்த அதே சைக்காலஜிக்கல் வலை.. பென் ஸ்டோக்ஸ்க்கு ஆஸி பிளான் – ஸ்மித் பேச்சு
“அவர் திரும்பி வருவது குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால், அவர் இன்னும் ஒரு ஆட்டத்திற்கு ஓய்வெடுப்பார் என்று நான் நினைக்கிறேன். அவரைப் போன்ற ஒரு வீரர் விளையாடாமல் இருந்தால் நிச்சயம் அது அணிக்கு நல்ல விஷயமாக இருக்காது. ஆனால் அவர் சீக்கிரத்தில் திரும்பி வந்து விடுவார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






