யாரும் குறை சொல்லாதீங்க.. 8வது இடத்தில் கம்பீர் அந்த வேலையை செய்ய காரணமே இதுதான் – இந்திய பேட்டிங் கோச்

0
69

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதன் கடைசி டெஸ்ட் போட்டி நாளை துவங்க இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி எப்படி அணுகுகிறது என்பது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி இரண்டு போட்டிகள் தோல்வி அடைந்து ஒரு வெற்றி மட்டும் ஒரு ட்ரா என தொடரில் பின்தங்கி உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை சமன் செய்ய வேண்டுமானால் நாளை நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்ற நிலைமையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி வரை இந்திய அணி நான்காவது பவுலராக ஒரு முழுமையான பந்துவீச்சாளரை நம்பாமல் பேட்டிங் செய்யக் கூடிய பந்துவீச்சாளரோடு களம் இறங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 விக்கெட்டுகள் கைப்பற்றுவது முக்கியம் என்று இருக்கும் நிலையில் இந்திய அணி மூன்று பிரதான பந்துவீச்சாளர்களோடு மட்டுமே களமிறங்குவது வெற்றியைத் தேடி தராது என முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் எட்டாவது வரிசையில் பேட்டிங் செய்யக்கூடிய ஒரு பந்துவீச்சாளர் களமிறங்குவது குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய பேட்டிங் கோச் பேட்டி

இதுகுறித்து அவர் கூறும் போது “பாருங்கள், ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டின் சமநிலையை பார்க்க வேண்டும். 20 விக்கெட்டுகள் எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல 550 முதல் 600 ரன்கள் எடுப்பதும் முக்கியம். எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் நாங்கள் அதிக ரன்கள் எடுத்ததால் வெற்றி பெற்றோம். பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்தி பேட்டிங் வலிமையை குறைக்கும் போது அது ஆடுகளத்தின் தன்மையை அறிந்து செய்ய வேண்டிய விஷயமாகும்.

இதையும் படிங்க:கம்பீருடன் என்ன பிரச்சனை ஏற்பட்டது?.. ஓவல் மைதான ஆடுகள தயாரிப்பாளர் பேட்டி.. நடந்தது நியாயமா?

கேப்டன், பயிற்சியாளர், அணி நிர்வாகம் இது குறித்து இறுதி முடிவை எடுப்பார்கள். நீங்கள் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் விளையாடும் போது அவர்களுக்கு சரியான ஸ்பெல் கிடைக்கும். அதுவே நீங்கள் ஆறு பந்துவீச்சாளர்களோடு விளையாடினால் மற்றொருவர் அண்டர் ஸ்பெல் நிலையில் வீச வேண்டி வரும். எனவே ஆறாவது பவுலர் பேட்டிங் தெரிந்திருந்தால் அது இந்திய அணிக்கு கூடுதல் நன்மை அளிக்கக்கூடிய விஷயமாகும்” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -