அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிகளை துபாய்க்கு மாற்றும்படி வலியுறுத்தி வந்தது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் நடக்க இருக்கிறது என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான பாசித் அலி ஐசிசி குறித்து கடுமையான விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது என்ற தகவல் வெளிவந்த சமயத்தில் இருந்தே பல்வேறு சிக்கல்கள் உலா வரத் தொடங்கின. முதலில் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட முடியாது எனவும் அதன் போட்டிகளை துபாயில் விளையாடும் படி ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் எனவும் பாகிஸ்தான் மக்கள் இந்திய வீரர்களை வரவேற்க தயாராக இருக்கிறார்கள் என்றும் கூறினார்கள்.
இந்த சூழ்நிலையில் பிசிசிஐ இதனை திட்டவட்டமாக மறுத்து போட்டியை பொதுவான இடத்தில் வைக்கும்படி கோரிக்கை வைத்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியை நீக்கிவிட்டு சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தும் என்று சில முன்னால் வீரர்கள் கூறி வந்தனர். இந்த சூழ்நிலையில் தற்போது சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது என்ற தகவல் தற்போது பரவி வரும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி இது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஐசிசி வெறும் பெயருக்கு மட்டுமே உள்ளது
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்தியாவுக்கு மாற்றலாம் என்று மக்கள் கூற தொடங்கி விட்டனர். தயவுசெய்து இந்தியாவுக்கு எடுத்துச் செல்லுங்கள் அதை செய்ய சொல்கிறேன். பாகிஸ்தானியர் எதுவும் சொல்ல மாட்டார்கள். இந்தியாவுக்கு எடுத்துச் சென்று என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஒளிபரப்பாளர் ஆழ்ந்த சிக்கலில் இருப்பார்கள்.
இதையும் படிங்க:கோலி இல்லை.. இந்தியாவின் ஸ்டைலான வீரர் இவர்தான்.. இதுலயும் அவர்தான் கிங் – டிராவிஸ் ஹெட் பேட்டி
பாகிஸ்தான் நடப்புச் சாம்பியன் என்பதால் ஐசிசி சாம்பியனஸ் டிராபியை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. ஐசிசிக்கு முதலில் தைரியம் இருந்தால் முதலில் டிராவை அறிவிக்கவும். உங்களுக்கு தைரியம் இருந்தால் முதலில் எந்த அணி எந்த மைதானத்தில் விளையாடும் என்பதையும் அறிவிக்கவும். அந்த தைரியம் ஐசிசிக்கு இல்லை. பிசிசிஐ மற்றும் பிசிபியிடம் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஐசிசி என்பது வெறும் பெயருக்கு மட்டுமே அவர்களின் பணி என்பது பூஜ்ஜியம்” மட்டும் என்று கூறி இருக்கிறார்.






