சிஎஸ்கே அணியின் தோனி எப்பொழுதும் வீரர்களுக்கு என்ன மாதிரி வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் கூறியிருக்கிறார்.
நேற்று சிஎஸ்கே அணி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு கேப்டனாகவும் பேட்டிங்கில் ஃபினிஷர் ஆகவும் மகேந்திர சிங் தோனி மிகவும் முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
தோனி கற்றுத் தருவது இதைத்தான்
இது குறித்து சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் கூறும் பொழுது “தோனி கேப்டனாக இல்லாத போதும் கூட அணிக்குள் அவரது செல்வாக்கு எப்பொழுதும் இருந்தது. ருதுராஜ் உடனான அவரது உறவு மிகவும் முக்கியமானது. மேலும் பிளம்மிங் மற்றும் அனைத்து வீரர்களுடன் அவருடைய உறவும் அணிக்கு எப்பொழுதும் மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது”
“அவர் விளையாட்டு பற்றிய வழக்கமான அடிப்படை விஷயங்களை கற்றுக் கொடுப்பதில்லை. அவர் விளையாட்டில் அமைதியை கொண்டு வருகிறார். அதன் மூலம் விளையாட்டை எப்படி விளையாடுவது என்று உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். அவர் கிரிக்கெட்டை புரிந்து கொள்ள உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். அணிக்குள் அவரது செல்வாக்கு எப்பொழுதும் இருக்கிறது. அவர் வழக்கமாக கொண்டு வரும் அமைதியை நாம் மீண்டும் நேற்று பார்த்தோம்”
சிஎஸ்கே-வில் இது பிரச்சனை இல்லை
“எங்கள் அணியில் யார் கேப்டன் யார் கேப்டன் இல்லை என்பது பிரச்சனை கிடையாது. தோனி கேப்டனாக இல்லாத பொழுதும் எதுவும் இங்கு மாறிவிடவில்லை. அவரது உண்மையான செல்வாக்கின் அடிப்படையில் அவர் எப்பொழுதும் அணியின் முக்கியமான ஒரு அங்கமாக தொடர்ந்து பங்களிப்பு செய்து கொண்டிருக்கிறார்”
இதையும் படிங்க : தோனி கேப்டனா அசத்திட்டார்.. நேத்து அவர் செஞ்ச இந்த ஒன்னுதான் வெற்றிக்கு காரணம் – மைக்கேல் கிளார்க் பேட்டி
“கேப்டனாக மற்றும் பேட்ஸ்மேனாக தற்போது எங்கள் அணியில் விளையாடுவதற்கு ருதுராஜ் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. ஆனால் தோனி வழக்கம்போல் அவருடைய சிந்தனை மற்றும் உள்ளீடுகளை அணிக்கு கொடுத்து கொண்டு இருப்பார். நான் முன்பே சொன்னது போல அவர் எப்பொழுதும் அமைதியானவர் மேலும் அவருடைய செல்வாக்கு அணியில் எப்பொழுதும் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






