தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய ஏ அணி மற்றும் இந்திய பி அணிகள் மோதி வருகின்றன.
இதில் இந்திய ஏ அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக இருக்கிறார். இந்திய பி அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாக இருக்கிறார். இந்த இந்திய பி அணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் இந்திய நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம்பெற்று இருக்கிறார்.
பழைய ரிஷப் பண்ட்
சாலை விபத்தில் சிக்கி ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த ரிஷப் பண்ட் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் திரும்பி வந்தார். பிறகு டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றார்.
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திற்கு உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபிக்கு வந்திருக்கிறார். மேலும் இந்திய ஏ அணிக்கு எதிரான போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 34 பந்தில் அரைசதம் அடித்து எப்படி போனாரோ அப்படியே திரும்பி வந்திருக்கிறார்.
எதிரணியின் கூட்டத்தில் பங்கேற்பு
இந்த நிலையில் இந்தியா ஏ மற்றும் இந்திய பி அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் நான்காவது நாள் தொடக்கத்தில், இந்திய ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில் தங்கள் வீரர்களை ஒன்றாக இணைத்து இன்றைய நாளுக்கான திட்டத்தை விளக்கிக் கொண்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில் கூட்டத்தோடு கூட்டமாக இந்திய பி அணிக்காக விளையாடும் ரிஷப் பண்ட் இந்திய ஏ அணியின் போட்டித் திட்டம் குறித்தான கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டார். அதை இந்திய ஏ அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதையும் படிங்க : தோனியின் 20 வருட சாதனை.. அனாயசமாக டீல் செய்த துருவ் ஜுரல்.. ரோகித் மறுவாய்ப்பு தருவாரா?
மேலும் இதை தொலைக்காட்சியில் பார்த்த கிரிக்கெட் வர்ணனையாளர்கள் “அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? ரிஷப் பண்ட் ரகசியமாக இல்லையே அணியின் திட்டங்களை தெரிந்து கொண்டு விட்டார் என நகைச்சுவையாக கூறிய ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ரிஷப் பண்டின் இந்த ஜாலியான செயல் தற்பொழுது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
Look who was there in the India A huddle before the start of the day's play 😃 #DuleepTrophy| @IDFCFIRSTBank
— BCCI Domestic (@BCCIdomestic) September 8, 2024
Follow the match 🔽 https://t.co/Oke5l0BJpq pic.twitter.com/MxL8Pv05dV