தோனியின் 20 வருட சாதனை.. அனாயசமாக டீல் செய்த துருவ் ஜுரல்.. ரோகித் மறுவாய்ப்பு தருவாரா?

0
77
Dhoni

தற்போது நடைபெற்று வரும் உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பராக செய்திருந்த சாதனையை இந்திய இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் சமன் செய்திருக்கிறார்.

இந்திய அணி இந்த மாதம் செப்டம்பர் 19ஆம் தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக உள்நாட்டில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் துருவ் ஜுரலுக்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது.

- Advertisement -

துலீப் டிராபி தோனி சாதனை

2004-05ஆம் ஆண்டு துலீப் டிராபியில் மகேந்திர சிங் தோனி கிழக்கு மண்டலம் அணிக்கு விளையாடும் பொழுது விக்கெட் கீப்பராக ஒரு இன்னிங்ஸில் 7 கேட்ச் பிடித்து அதிக கேட்ச் ஒரு இன்னிங்ஸில் பிடித்த விக்கெட் கீப்பராக சாதனை படைத்திருந்தார். தற்பொழுது நடைபெற்று வரும் துலீப் டிராபியில் இந்திய பி அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் 20 வருட இந்த சாதனையை துருவ் ஜுரல் சமன் செய்திருக்கிறார்.

இந்திய பி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 184 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், முசீர் கான், சர்பராஸ் கான், நிதிஷ் ரெட்டி, சாய் கிஷோர் மற்றும் நவ்திப் சைனி என மொத்தம் ஏழு வீரர்களை விக்கெட் கீப்பராக கேட்ச் செய்து துருவ் ஜுரல் வெளியேற்றி இந்த சாதனையை படைத்தார்.

- Advertisement -

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா?

தற்போது இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் ஜெய்ஸ்வால் ரோஹித் சர்மா கில் மற்றும் விராட் கோலி என முதல் நான்கு வீரர்களுக்கு இடம் உறுதியாக இருக்கிறது. மேலும் ஐந்தாவது இடத்தில் முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் விளையாடுவது 100% உறுதி. தற்போது இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவன்னில் ஆறாவது இடம் காலியாக இருக்கிறது. மேலும் இரண்டாவது விக்கெட் கீப்பர் மற்றும் பேக்கப் பேட்ஸ்மேன் என மூன்று இடங்கள் காலியாக இருக்கிறது.

இதையும் படிங்க : ஒரே ஒருத்தர்தான்.. என் வாழ்நாள் முழுவதும்.. அவர் கூட பேட்டிங் செய்ய விரும்பறேன்.. காரணம் இருக்கு – தினேஷ் கார்த்திக் விருப்பம்

தற்போது இந்த மூன்று இடங்களுக்கும் சேர்த்து இரண்டு வீரர்களை தேர்வு செய்யும் சூழலே காணப்படுகிறது. கேஎல்.ராகுல் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய சூழ்நிலையில் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட மாட்டார். அவர் ஆறாவது இடத்திற்கான பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த ஒரு காரணத்தினால் துருவ் ஜுரல் இரண்டாவது விக்கெட் கீப்பராக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -