இந்தியா ஆஸி ODI டி20 சீரிஸ்.. இந்தியாவில் எந்த டிவியில் பார்க்கலாம்?.. போட்டி அட்டவணை – முழு தகவல்கள்

இந்திய அணி ஆஸ்திரேலியவிற்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த தொடர்களுக்கான போட்டி அட்டவணை மற்றும் ஒளிபரப்பு விபரங்களை பார்க்கலாம்.

- Advertisement -

இந்திய அணி இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது.

விராட் கோலி ரோஹித் சர்மா வருகை

முதலில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் இந்த தொடருக்கு இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் எனக்கு மீண்டும் வருகிறார்கள்.

முதல் ஒருநாள் போட்டி – அக்டோபர் 19 – பெர்த்
2வது ஒருநாள் போட்டி – அக்டோபர் 23 – அடிலய்டு
3வது ஒருநாள் போட்டி – அக்டோபர் 25 – சிட்னி
இந்த 3 போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்குகின்றன.

- Advertisement -

எந்த சேனலில் பார்க்கலாம்?

இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தொடரிலும் ஜெய்ஸ்வால் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டி20 போட்டி – அக்டோபர் 29 – கான்பேரா
2வது டி20 போட்டி – அக்டோபர் 31 – மெல்ஃபோன்
3வது டி20 போட்டி – நவம்பர் 2 – ஹோபர்ட்
4வது டி20 போட்டி – நவம்பர் 6 – கோல்ட்கோஸ்ட்
5வது டி20 போட்டி – நவம்பர் 8 – பிரிஸ்பேன்
இந்த ஐந்து போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1:45 மணிக்கு துவங்குகிறது.

இதையும் படிங்க : யூடியூப் சேனல் வருமானத்துக்கு பேசறமா?.. கம்பீர் பேச்சுக்கு அஸ்வின் பதிலடி.. மீண்டும் கேள்வி

மேலும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான வெள்ளைப்பந்து தொடர்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஆன்லைனில் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் பார்க்கலாம்.

- Advertisement -
Published by

Recent Posts