பெரிய திறமை இல்லாதவர்கள்.. விராட் ரோகித் எதிர்காலத்தை முடிவு பண்றாங்க – ஹர்பஜன் சிங் எதிர்ப்பு

0
44
Harbhajan

இந்திய அணி நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்காலத்தை பெரிய திறமை இல்லாதவர்கள் தீர்மானிக்கிறார்கள் என ஹர்பஜன் சிங் விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து, தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்குப் பிறகு ஆலோசித்து முடிவு செய்யப்படும் என செய்திகள் வந்தது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டம் கம்பீர் மற்றும் அகர்கர் தலைமையில் நடைபெறும் என்றும் கூறப்பட்டிருந்தது.

- Advertisement -

எனக்கும் இதுதான் நடந்தது

இது குறித்து பேசி உள்ள ஹர்பஜன் சிங் கூறும்பொழுது “ஜாம்பவான் வீரர்கள் ஏன் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்? இல்லை ஏன் தள்ளி வைக்கப்படுகிறார்கள்? இந்த கேள்விக்கு நம் யாரிடமும் பதில் கிடையாது. நான் பார்த்து இது எனக்கும் நடந்திருக்கிறது. இது எனது அணியில் பல வீரர்களுக்கு நடந்திருக்கிறது. துரதிஷ்டவசமாக இது குறித்து நாங்கள் விவாதிக்கவோ பேசவோ கிடையாது”

“விராட் கோலி போன்ற ஒரு சாம்பியன் வீரர், தற்போது பார்க்கும் போதும் மிகவும் வலிமையாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட வீரரின் எதிர்காலத்தை அதிகம் சாதிக்காதவர்கள் தீர்மானிப்பது சற்று துரதிஷ்டவசமானது”

- Advertisement -

விராட் ரோஹித்துக்கு நன்றி

“விராட் ரோஹித் சரியான பாதையில் இல்லை என நான் நினைத்த காலமே கிடையாது. அவர்கள் எப்பொழுதுமே ரன்கள் எடுத்திருக்கிறார்கள். இந்திய அணியின் சிறந்த வீரர்களாக எப்போதும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பேட்ஸ்மேன் ஆகவும் அணியின் தலைவராகவும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்”

இதையும் படிங்க : விராட் அப்ப செஞ்ச அது எனக்கு பிடிக்கல.. இப்ப அவர் யாருன்னு காட்டிகிட்டு இருக்காரு – அஸ்வின் பேச்சு

“இவர்கள் எப்பொழுதும் மிகவும் வலிமையாக முன்னேறி வருகிறார்கள். மேலும் இளைய தலைமுறைக்கு முன்மாதிரியான வீரர்களாகவும் இருக்கிறார்கள். சாம்பியனாக இருப்பதற்கு என்ன தேவை என காட்டுகிறார்கள். சரியான முன்மாதிரியாக இருந்ததற்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -