நியூசி 2வது டெஸ்ட்.. கில் ரிஷப் பண்ட் ஆகாஷ் தீப் விளையாடுவார்களா?.. இந்திய துணை கோச் பதில்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

0
192
Gill

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில், ரிஷப் பண்ட் மற்றும் ஆகாஷ் தீப் மூவர்களும் விளையாடுவார்களா என இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் நேரடியாக பதில் கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிரா புனே மைதானத்தில் நாளை மறுநாள் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற இருக்கிறது. நாளைய போட்டியை வென்று தொடரை சமன் செய்ய வேண்டிய பெரிய நெருக்கடியில் இந்திய அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணி நிர்வாகம் திடீர் மன மாற்றம்

நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை தோற்ற காரணத்தினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக அதே நேரத்தில் கொஞ்சம் பந்து மெதுவாக செல்லும்படியான ஆடுகளம் புனே மைதானத்தில் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்திய அணி நிர்வாகம் பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் சாதகமான ஆடுகளங்களை உருவாக்கி வந்தது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்த காரணத்தினால் தற்போது முடிவை மாற்றி சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திற்கு திரும்பி இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

கில் ரிஷப் பண்ட் விளையாடுவார்களா?

இதுகுறித்து பதில் அளித்து இருக்கும் ரியான் டென் டஸ்கேட் கூறும் பொழுது “கில்லுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் லேசான அசவுரியம் இருந்தது. அதே சமயத்தில் பெங்களூரு டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருந்த பொழுது அவர் பேட்டிங் பயிற்சியில் நீண்ட நேரம் ஈடுபட்டார். எனவே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான சோதனையில் தேறிவிடுவார் என்று நம்புகிறேன்”

“அதே சமயத்தில் ரிஷப் பண்ட்டை எடுத்துக் கொள்ளும் பொழுது, நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விக்கெட் கீப்பராகவே செயல்படுவார் என்று நம்புகிறேன். அவருக்கு முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்யும்பொழுது கடைசியில் கொஞ்சம் ஓடுவதில் சிரமம் இருந்தது அவ்வளவுதான்”

இதையும் படிங்க : கடைசி 4 விக்கெட் 200 ரன்.. அசத்திய தென் ஆப்பிரிக்கா.. சொந்த மண்ணில் பங்களாதேஷ்அணி சிக்கியது.. முதல் டெஸ்ட்

“ஆகாஷ் தீப் பவுலிங் பயிற்சியின் போது மிகச் சிறப்பாக ஓடி நல்ல முறையில் வேகமாக பந்து வீசி வருகிறார். அவரை இரண்டாவது போட்டியில் தேர்வு செய்வது என்பது ஆடுகளத்தின் தன்மை மற்றும் அணிக்கலவையைப் பொறுத்தே அமையும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -