தற்போது பங்களாதேஷ் மண்ணில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறுவதற்கான வலிமையான நிலையில் இருக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு எடுத்த பங்களாதேஷ் அணி வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஹசன் ஜாய் 30 ரன்கள் எடுத்தார். ரபாடா, முல்டர் மற்றும் கேசவ் மகாராஜ் மூவரும் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.
அசத்திய தென் ஆப்பிரிக்க கடைசி வரிசை
இந்த நிலையில் நேற்று தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இதன் காரணமாக போட்டி எந்த பக்கத்திற்கும் சாயாமல் சமநிலையில் இருந்தது. பங்களாதேஷ் அணியை குறைந்த ரன்னில் சுருட்டியும் தென் ஆப்பிரிக்க அணிக்குவெற்றி பெறுவதற்கான பெரிய வாய்ப்பு உருவாகவில்லை.
இன்று தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு விக்கெட் கீப்பர் வெர்ரேன்னே 114, வியான் முல்டர் 54 ரன்கள் எடுத்தார்கள். இந்த ஜோடி 200 பந்துகளில் 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அடுத்து பத்தாவது இடத்தில் வந்த பெடிட் 32 ரன்கள் எடுத்து 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் வருவதற்கு உதவியாக இருந்தார். தென் ஆப்ரிக்க அணி கடைசி நான்கு விக்கெட்களுக்கு 200 ரன்கள் எடுத்தது. இறுதியாக 308 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட் கைப்பற்றினார்.
ஓரளவு சுதாரித்த பங்களாதேஷ் அணி
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு சத்மன் இஸ்லாம் 1, மொமினுல் ஹக் 0, கேப்டன் நஜ்முல் சாந்தோ 23, ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து துவக்க ஆட்டக்காரர் ஹசன் ஜாய் 38, முஸ்பிக்யூர் ரஹீம் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் 3வது டெஸ்ட்.. இங்கிலாந்து பிளேயிங் XI அறிவிப்பு.. இந்திய அணிக்கு போட்ட ரூட் – புதிய மாற்றங்கள்
இன்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் தென் ஆப்பிரிக்கா அணியை விட 101 ரன்கள் தற்பொழுது பின்தங்கி இருக்கிறது. முதல் மூன்று விக்க்ட்டை சீக்கிரத்தில் எழுந்த அந்த அணி இன்று கட்டத்தில் ஓரளவு சுதாரித்து இருக்கிறது. இப்போதைக்கு இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கைகள் ஓங்கி இருக்கிறது. ரபாடா இரண்டு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்!






