இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகம் ஆன 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் இந்திய அணிக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் சாமின் மூத்த சகோதரர் பில்லி வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவர்களது தந்தை சாமை எப்படி தயார் படுத்தினார் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கான்ஸ்டாஸ்
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுக போட்டியில் விளையாடிய 19 வயது தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவரது ஆட்டம் அபாரமானதாக இருந்தது. குறிப்பாக உலகின் சிறந்த பந்துவீச்சாளராக கருதப்படும் இந்தியாவின் பும்ரா பந்துவீச்சை எதிர்கொண்டு ஸ்கூப் திசையில் ஒரு அபாரமான சிக்ஸர் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த சூழ்நிலையில் அவரது மூத்த சகோதரர் பில்லி சிறுவயதில் சாமை எப்படி கிரிக்கெட் விளையாட தயார் படுத்தினார் என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
சாமுக்கு உதவி செய்த தந்தை
இதுகுறித்து பில்லி கூறும்பொழுது “நாங்கள் குழந்தைகளாக இருந்த போது முதன்முதலாக எங்கள் அப்பா பந்து வீசுகின்ற ஒரு இயந்திரத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். அவர் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் வருகின்ற பந்தாக நினைத்து 90 மைல் வேகத்தில் அதிவேகமாக அந்த இயந்திரத்தில் இருந்து பந்து வரும்படி செட் செய்தார். பந்து வேகமாக வரும் போதும் சாம் அதை பேட்டின் மையப் பகுதியில் வாங்கினார். அந்த அனுபவம் சிறுவயதில் இருந்து வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அவரது தன்னம்பிக்கையை வளர்க்க உதவியது.
இதையும் படிங்க:விராட் செஞ்சது தப்பு.. நாம ஆடும்போது கில்கிறிஸ்ட் ஹேடன் என்ன செஞ்சாங்க தெரியுமா – இர்பான் பதான் பேட்டி
ஐந்து முதல் ஆறு வயதில் இருந்தே சாம் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட வேண்டும் என்பது கனவு. அது தற்போது நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி. நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக எங்கள் குடும்பம் உணர்கிறோம். மேலும் போட்டி தொடங்க இருந்த முந்தைய நாளில் நான் சாமிடம் பேசினேன். ஆனால் அவர் அப்போது எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அமைதியான அணுகுமுறையை வெளிப்படுத்தினார். இந்த பெரிய நாளுக்காக அவர் தயாராக இருந்திருக்கிறார்” என்று பில்லி கூறி இருக்கிறார்.






