இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணி 356 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு கேப்டன் டாப் லாதம் 59, டாம் ப்ளூன்டல் 89 ரன்கள் எடுத்தார்கள்.
இந்தியா அணியின் தரப்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகள், குர்நூர் பிரார் மற்றும் அன்சூல் காம்போஜ் தலா இரண்டு விக்கெட்டுகள், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து படிக்கல் 20, கில் 17, ரிஷப் பண்ட் 23, கேஎல்.ராகுல் 25, வாஷிங்டன் சுந்தர் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். துருவ் ஜுரல் 7 ரன் களத்தில் இருக்கிறார். இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் ஆரம்பிக்க இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து 240 ரன்கள் பின் தங்கி உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 240 ரன்கள் இங்கிருந்து எடுக்க வேண்டும். ஆனால் முக்கிய விக்கெட்டுகளை இழந்து விட்டார்கள். எனவே இந்த போட்டியில் ஏதாவது மேஜிக் நடக்காமல் இந்திய அணி வெல்வது கடினம்!






