நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங் குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசும்போது, “இந்த நிலையில் இது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஆனால் அவர்களும் மனிதர்கள்தான், தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. தவறுகள் மீண்டும் மீண்டும் நடக்கும்போது அதில் ஏதேனும் போக்கு உள்ளதா என்றும், அதைச் சரிசெய்ய முடியுமா என்றும், சரிசெய்ய வேண்டுமா என்றும் கண்டறிய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா சிறிது காலமாக மிகவும் சாதாரண ஃபீல்டிங் அணியாக உள்ளது, அதை மாற்ற விரும்பும். உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பிறகு ஃபீல்டிங் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டுள்ளது, எனவே நன்றாக ஃபீல்டிங் செய்யாததற்கு இப்போது எந்தக் காரணமும் சொல்ல முடியாது” என்று கூறி இருக்கிறார்.
இறுதியாக அணியின் சீனியர்கள் குறித்துப் பேசும்போது, “சீனியர்கள் தர நிர்ணயத்தை உருவாக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன். நான் ஆர்சிபியில் மென்டராகப் பணியாற்றுகிறேன், பயிற்சி அமர்வுகளில் விராட் கோலிதான் தர நிர்ணயத்தை உருவாக்கினார் என்பதும், மற்ற அனைவரும் அதைப் பின்பற்றினார்கள் என்பதும் மிகவும் தெளிவாக இருந்தது. இந்திய அணியைப் பொறுத்தவரை, பந்த், கேஎல் ராகுல், சுப்மன் கில் போன்றவர்களிடமிருந்து இது வர வேண்டும். வீரர்கள் தாங்கள் முன்னேற வேண்டும் என்று நினைக்க வேண்டும். அணுகுமுறையும், நடக்கும் பயிற்சி அமர்வுகளும் நல்ல தரத்தில் இருந்தால், மைதானத்தில் விளையாடும்போது அது நிச்சயம் வெளிப்படும்” என்று கூறி இருக்கிறார்.






