“இந்தியாவுக்கும் மும்பைக்கும் இனி ரோகித் கேப்டன் கிடையாது.. காரணம் இதுதான்!” – ஏபி.டிவில்லியர்ஸ் ஆச்சரியமான தகவல்!

0
9306
Rohit

இந்தியா ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்து வருகிறார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதற்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர மற்ற எந்த வடிவத்திற்கும் ஆர்வம் காட்டவில்லை என்று செய்திகள் வெளிவந்தன. இதன் காரணமாக அவர் தொடர்ச்சியாக கேப்டனாக இருக்க விரும்பவில்லை என்றும் தெரிகிறது.

- Advertisement -

தற்போது மேலும் 36 வயதுக்கு மேல் ஆகி இருக்கும் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரிலும் தொடர்ச்சியாக கேப்டனாக களத்தில் செயல்பட முடியுமா என்று தெரியவில்லை.

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு இம்பேக்ட் பிளேயர் என்ற விதி கொண்டுவரப்பட்டது. இந்த விதியின் காரணமாக உடல் தகுதியில் கொஞ்சம் பின் தங்கிய வீரர்கள் கூட விளையாட முடிந்தது. இந்த அடிப்படையில் இம்பேக்ட் பிளேயராக ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

எனவே இந்திய கிரிக்கெட் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி என இரண்டுக்கும் ரோகித் சர்மா இனி கேப்டன் ஆக தொடர்வது சந்தேகம் என தென் ஆப்பிரிக்கா லெஜன்ட் ஏபி.டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ரோகித் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக விடப் போகிறார் என்பது எனக்கு வியப்பான செய்தியாக இருக்கிறது. ரோகித் இந்திய அணியின் கேப்டனாக அணியை சுமந்து சென்றார். அதில் நிறைய அழுத்தம் இருக்கின்ற காரணத்தினால் அவர் இதை விரும்பி இருக்கலாம்.

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் வருவது அவர்களுக்கு பெரிய செய்தி. அவர் பலகாலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தவர். அவர் வான்கடே மைதானத்தில் விளையாட விரும்புவார். குஜராத் அணிக்கு ஒரு முறை கோப்பையையும் ஒரு முறை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச் சென்று இருக்கிறார். அங்கு தன்னுடைய நேரம் முடிந்து விட்டதாக ஹர்திக் பாண்டியா உணர்ந்திருக்கலாம்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -