இரண்டாம் நாளில் பட்டைய கிளப்பிய அஷ்வின்.. வலுவான நிலையில் இந்திய அணி!

0
208

முதல் இன்னிங்சில் 404 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது இந்தியா.

சிட்டோகிராம் மைதானத்தில் வங்கதேசம்-இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

துவக்க ஜோடி கில்-ராகுல் முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் சேர்த்திருந்தபோது, தாஜுல் இஸ்லாம் பந்தில் சுப்மன் கில் 20 ரன்களுக்கு ஆட்டம் இருந்தார். அடுத்த சில பந்துகளிலேயே கேப்டன் கேஎல் ராகுல் 22 ரன்களுக்கு கலீத் அஹ்மது பந்தில் அவுட் ஆனார்.

துரதிஷ்டவசமாக விராட் கோலி 5 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து தாஜுல் இஸ்லாம் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதிரடியாக ஆடிய பண்ட் 46 ரன்களுக்கு அவுட்டானார். 112/4 என இருந்த இந்தியாவை புஜாரா மற்றும் ஷ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து சரிவிலிருந்து மீட்டனர்.

இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்தது. புஜாரா 90 ரன்களுக்கு அவுட்டாகினர். அக்ஸர் பட்டேல் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, முதல் நாள் முடிவில் இந்தியா 278/6 என இருந்தது.

2ம் நாள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே ஷ்ரேயாஸ் ஐயர் 86 ரன்கள் அடித்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த அஸ்வின் மற்றும் குல்தீப் இருவரும் நீண்ட நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

அஸ்வின் 58 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். குல்தீப் யாதவ் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முதல் இன்னிங்ஸ் இன் முடிவில் இந்திய அணி 404 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வங்கதேசம் அணி சார்பில் அதிகபட்சமாக தாஜுல் இஸ்லாம் மற்றும் மெகதி ஹாசன் இருவரும் தலா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.