இந்திய கிரிக்கெட்

413 ரன்.. ஆஸிக்கு எதிராக கேஎல் ராகுல் பிரம்மாண்ட சதம்.. சாய் சுதர்சன் அசத்தல்.. இந்தியா வெற்றி

ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

தற்போது ஆஸ்திரேலியா ஏ அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.

சுருண்ட இந்திய ஏ அணி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி மிகச் சிறப்பாக விளையாடி 420 ரன் எடுத்தது. மானவ் சுதார் ஐந்து விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய ஏ அணி 194 ரன்கள் எடுத்து சுருண்டது. இந்தியா அணிக்கு சாய் சுதர்சன் 75 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய ஏ அணி 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் மீண்டும் மானவ் சுதார் மூன்று விக்கெட் கைப்பற்றினார். இந்திய ஏ அணிக்கு 412 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

கேஎல்.ராகுல் – சாய் சுதர்சன் அபாரம்

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய ஏ அணிக்கு நாராயணன் ஜெகதீசன் 36, படிக்கல் 5, துருவ் ஜுரல் 56 ரன்கள் எடுத்தார்கள். இதற்கு முன்பாக துவக்க ஆட்டக்காரர் கேஎல்.ராகுல் மற்றும் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய சாய் சுதர்சன் இருவரும் சேர்ந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள்.

இதையும் படிங்க : புள்ளிவிபரம் தப்பா?.. இந்தியாவின் இந்த ஸ்பின்னரை விட.. எங்க முகமது நவாஸ் தான் பெஸ்ட் – சோயப் அக்தர் பேச்சு

சிறப்பாக விளையாடி சதம் அடித்து சாய் சுதர்சன் 100 ரன்னில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்து 176 ரன்கள் எடுத்தார். இந்திய ஏ அணி 5 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -
Published by