வெஇ டெஸ்ட் தொடர்.. இந்திய அணிக்கு டிரா கூட பெரிய சிக்கல்.. கம்பீருக்கு காத்திருக்கும் பிரச்சனை – முழு அலசல்

0
230
Gill

நாளை இந்திய அணி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி பலம் இல்லாத அணி என்றாலும் இந்திய அணிக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கிறது.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. முதல் போட்டி நாளை துவங்க இருக்கும் நிலையில், இரண்டாவது போட்டி டெல்லி மைதானத்தில் அக்டோபர் 10ஆம் தேதி துவங்குகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவால் சிக்கல்

ஆஸ்திரேலியா அணி புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் முதல் தொடராக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி, முழுமையாக வென்று இருக்கிறது. இதனால் அந்த அணி தற்போது முதல் இடத்தில் இருக்கிறது.

எனவே வலிமை குறைவான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய போல இந்திய அணியும் முழுமையாக வெல்ல வேண்டும். அப்பொழுதுதான் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் இருப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும். இந்த அணிக்கு எதிராக டிரா செய்வது கூட இந்திய அணிக்கு பின்னடைவாகவே அமையும்.

- Advertisement -

கம்பீருக்கு சிக்கல்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசியக் கோப்பை தொடர்களை கம்பீர் வென்று இருக்கிறார். ஆனால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் மோசமான தோல்விகள் கம்பீர் பயிற்சியில் வந்திருக்கிறது.

இதையும் படிங்க : மன்னிப்புக்கு வாய்ப்பே கிடையாது.. ஆசிய கோப்பை வேணும்னா இந்தியா இதை செய்யணும் – மொஹ்சின் நக்வி பேட்டி

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி சமன்தாதான் செய்திருக்கிறது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியைத் தவிர கம்பீர் பயிற்சியில் இந்திய டெஸ்ட் அணி பெரிய வெற்றியை எதுவும் பெறவில்லை. எனவே கம்பீர் சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் பயிற்சி ஆளாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதில் ஏதாவது தவறு நடந்தால் அவருடைய டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பு கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -