நடப்பு ஓமன் நாட்டில் நடைபெற்று வரும் எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி பாகிஸ்தான் ஏ அணியை வென்றது.
ஆசிய கிரிக்கெட் நாடுகளில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடர் தற்பொழுது ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு ஆசிய நாடுகள் பங்கு பெறுகின்றன. இந்திய அணியின் பிரிவில் பாகிஸ்தான், யுஏஇ மற்றும் ஓமன் நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.
அசத்திய இந்திய துவக்க ஜோடி
இந்திய அணிக்கு துவக்க ஜோடியாக வந்த அபிஷேக் ஷர்மா 22 பந்தில்5 கவுண்டர்கள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 35 ரன்கள் எடுத்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி பவர் பிளேவில் மட்டும் ஆட்டம் இழக்காமல் 68 ரன்கள் குவித்தது.
இதைத்தொடர்ந்து கேப்டன் திலக் வருமா 35 பந்தில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 44 ரன்கள், நெகேல் வதேரா 22 பந்தில் 25 ரன்கள், ரமன்தீப் சிங் 11 பந்தில் 17 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் சுபியான் முகீம் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
கடைசி இரண்டு ஓவருக்கு 24 ரன்
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாட வந்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் முகமது ஹாரிஸ் 6 ரன் மட்டும் எடுத்து வெளியேற ஏமாற்றும் தந்தார். அவரைத் தொடர்ந்து யாசிர் கான் 22 பந்தில் 33 ரன், காசிம் அக்ரம் 21 பந்தில் 27 ரன்கள், அராபத் மின்ஹாஸ் 29 பந்தில் 41 ரன்கள் எடுத்தார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்கள் 24 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரையும் வீசிய ராசி சலாம் 7 ரன்கள் மட்டுமே கொடுக்க கடைசி ஓவருக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் கடைசி ஓவரை வீசிய அன்சுல் கம்போஜ் 9 ரன்கள் மட்டும் கொடுக்க, இந்திய அணி கடைசி ஓவரில் பரபரப்பான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : விராட் பும்ரா கிடையாது.. இந்தப் பையன்தான் தலைமுறைக்கு ஒரு முறை பிறக்கும் வீரர் – மஞ்ச்ரேக்கர் கருத்து
இந்திய அணியின் பந்துவீச்சில் அன்சூல் காம்போஜ் 3 விக்கெட், ராசிக் சலாம் மற்றும் நிஷாந்த் சிந்து இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். இந்திய அணி இதற்கு அடுத்து யுஏஇ மற்றும் ஓமன் அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் ஒரு அணிக்கு எதிராக வெற்றி பெற்றால் கூட இந்திய அணி அரையிறுதிக்கு நுழைவது 99 சதவீதம் உறுதியாகி விடும்.






