50% ரன்.. துருவ் ஜுரல் ஆச்சரியமான சதம்.. ராகுல் சாய் சுதர்சன் படிக்கல் ஏமாற்றம்.. தெஆ அணி சிறப்பான பந்துவீச்சு

0
91
Jurel

இன்று தொடங்கிய தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி மொத்தம் 255 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

மேலும் இந்த போட்டியில் முன்னணி நட்சத்திர இந்திய வீரர்கள் எல்லோரும் சொற்ப ரன்னில் வெளியேற, இந்திய டெஸ்ட் அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் அசத்தலாக சதம் அடித்து அணியை காப்பாற்றி இருக்கிறார்.

- Advertisement -

நட்சத்திர வீரர்கள் ஏமாற்றம்

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் 0, கேஎல்.ராகுல் 19, சாய் சுதர்சன் 17, படிக்கல் 5, கேப்டன் ரிஷப் பண்ட் 24 ரன் எடுத்து வெளியேறினார்கள்.

இந்திய ஏ அணியின் முக்கிய ஐந்து விக்கெட்டுகள் சொற்ப நேரத்தில் ஆட்டம் இழந்த காரணத்தினால் தென் ஆப்பிரிக்க ஏ அணியின் கைகள் ஓங்கியது. இந்திய ஏ அணி 150 ரன் கூட எடுக்காமல் ஆல் அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

துருவ் ஜுரல் அபாரம்

இந்த நிலையில் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடி அரைச்சதம் அடித்த துருவ் ஜுரல் தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மேலும் போட்டியில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று 175 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 134 ரன்கள் குவித்தார். இந்திய ஏ அணி 255 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதையும் படிங்க : கம்பீர் என்ன நினைக்கிறாரோ எனக்கு அதுதான்.. சக வீரர்கள் கிட்ட பேசினப்ப இத சொன்னாங்க – அக்சர் படேல் பேட்டி

இந்த போட்டியில் ஒட்டுமொத்த இந்திய அணி எடுத்த ரன்களில் 50 சதவீதத்திற்கும் மேலான ரன்களை துருவ் ஜுரல் எடுத்திருக்கிறார். மேலும் இவரை விக்கெட் பெறாத பார்க்காமல் பேட்ஸ்மேன் ஆக கணக்கில் எடுத்து தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -