இந்திய கிரிக்கெட்

எமர்ஜிங் ஆசியா கப்.. இந்திய அணி அறிவிப்பு.. சூரியவன்சிக்கு வாய்ப்பு.. பாகிஸ்தான் அணிவுடன் மோதல்

தற்போது வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான ரைசிங் ஸ்டார் ஆசியா கப் தொடர்பான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 14 வயதான வைபவ் சூரியவன்சிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

சமீப காலத்தில் ஆசியா கப் தொடர் முடிவடைந்ததும், அதில் விளையாடிய எட்டு நாடுகளை வைத்து வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியா கப் தொடர் நடத்தப்படும். இந்த முறையும் நவம்பர் 14 முதல் நவம்பர் 23ஆம் தேதி வரையில் நடத்தப்படுகிறது.

ஆர்சிபி வீரர் கேப்டன்

தற்போது நடைபெற இருக்கும் ரைசிங் ஸ்டார் ஆசியா கப் டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ஜிதேஷ் சர்மா நியமிக்கப்பட்டிருக்கிறார். துணை கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் நமன் திர் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஸ் ஆர்யா, நேஹால் வதேரா, சூரியன்ஸ் ஷெட்கே, ரமன் தீப் சிங், அசுத்தோஸ் சர்மா, வைசாக் விஜயகுமார் என ஐபிஎல் தொடரில் நிறைய போட்டிகளில் வாய்ப்பு பெற்று விளையாடும் இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் உடன் மோதல்

இந்திய அணி இடம் பெற்று இருக்கும் பிரிவில் பாகிஸ்தான் யுஏஇ மற்றும் ஓமான் அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. எனவே இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவது உறுதியாகி இருக்கிறது. மீண்டும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்வதால் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கின்றன.

தற்போது பெரிய அளவில் கிரிக்கெட் உலகத்தை ஆச்சரியப்படுத்தி இருக்கும் 14 வயதான வைபவ் சூரியவன்சி முதல்முறையாக இந்திய ஏ அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதோடு பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவதும் தொடருக்கு முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது.

இதையும் படிங்க : தோனி சாரின் அந்த விஷயத்தைதான் என் பொண்ணு செஞ்சா.. அதான் இந்திய அணி சாம்பியன்.. ஜெமிமாவின் தந்தை உருக்கம்

இந்திய ஏ அணி: ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்தியா ஏ அணி:

பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, நேஹல் வதேரா, நமன் திர் (துகே), சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஜிதேஷ் சர்மா (கே), ரமன்தீப் சிங், ஹர்ஷ் துபே, அசுதோஷ் சர்மா, யாஷ் தாக்கூர், குர்ஜப்னீத் சிங், விஜய் குமார் வைஷாக், யுத்வீர் சிங் சரக், அபிஸ்.

காத்திருப்பு வீரர்கள்: குர்னூர் சிங் பிரார், குமார் குஷாக்ரா, தனுஷ் கோட்டியன், சமீர் ரிஸ்வி மற்றும் ஷேக் ரஷீத்.

- Advertisement -
Published by

Recent Posts