இன்று 2024 துலீப் டிராபி டெஸ்ட் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா சி அணியும் மோதும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்தியா டி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்தியா டி அணியில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் விளையாடும் வாய்ப்பை பெற்றார். மேலும் இந்திய ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில் இந்திய அணி உடன் இணைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திலக் வர்மா ரியான் பராக் ஏமாற்றம்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்தியா ஏ அணிக்கு பிரதம் சிங் 7, கேப்டன் மயங்க் அகர்வால் 7 ரன்கள் என ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். இதைத்தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர்கள் திலக் வர்மா 10, ரியான் பராக் 37 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்கள்.
இதைத்தொடர்ந்து இந்திய உள்நாட்டு இளம் வீரர்கள் சஷ்வத் ராவத் 15, குமார் குஷ்கரா 28 ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து இந்திய ஏ அணி முக்கிய ஆறு விக்கெட்டுகளை 144 ரன்களுக்கு இழந்து நெருக்கடியில் சிக்கியது.அந்த அணி மேற்கொண்டு 200 ரன்களை எட்டுமா? என்பது சந்தேகமாக இருந்தது.
காப்பாற்றிய மும்பை ஜோடி
இந்த நிலையில் மும்பை மாநில அணிக்காக விளையாடும் சாம்ஸ் முலானி மற்றும் தனுஷ் கோட்டியன் இருவரும் சேர்ந்து சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்கள். மேலும் இந்த ஜோடி 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைப்பு அசத்தியது. சிறப்பாக விளையாடிய தனுஷ் கோட்டியன் 80 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : 189 ரன் கூட்டணி.. திடீரென வந்து ருதுராஜுக்காக சதமடித்த இஷான் கிஷான்.. தமிழக இந்திரஜித் அசத்தல்.. துலீப் டிராபி 2024
இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாம்ஸ் முலானி இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆட்டம் இழக்காமல் 174 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உடன் 88 ரன்கள் எடுத்தார். இந்தியா ஏ அணி இன்று 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்தியா டி அணியின் தரப்பில் ஹர்ஷித் ராணா, வைசாக் விஜயகுமார் மற்றும் அர்ஸ்தீப் சிங் மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.