இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டி கைவிடப்பட்ட நிலையில், இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருந்தபொழுதும் மழை வந்தது. மேலும் அபிஷேக் ஷர்மா 13 பந்தில் 23 ரன்கள், கில் 16 பந்தில் 29 ரன்கள் எடுத்திருந்தார்கள். தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றியது.
இதற்காகவே காத்திருந்தேன்
அபிஷேக் ஷர்மா இந்த தொடர் குறித்து பேசும் பொழுது “ஆஸ்திரேலியா அன்னிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்காக, இந்த தொடருக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன். இப்படி ஒரு தொடர் வருகிறது என்று தெரிந்ததும் உற்சாகமாக இருந்தேன். ஆஸ்திரேலியா மைதானங்கள் பொதுவாக எனக்கு பேட்டிங் செய்ய சிறந்தவையாக தோன்றும். நாங்கள் இந்த தொடரில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரன்கள் எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்”
“நான் முன்பே சொன்னது போல எனக்கு பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் இடையே நடக்கும் போட்டி மிகவும் பிடிக்கும். நல்ல கிரிக்கெட் விளையாட விரும்பினால் நீங்கள் சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள விரும்ப வேண்டும். எனவே நான் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவே எனது பயிற்சியை அமைத்துக் கொண்டேன்”
எனக்கு அளிக்கப்பட்ட வேலை
” என்னுடைய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் நீ சென்று நம்பிக்கையுடன் விளையாடு என்று சொன்னார்கள். நான் எவ்வளவு வேகமாக விளையாடி ரன்கள் எடுத்துக் கொடுக்கிறனோ அதுதான் முக்கியமானதாக இருந்தது. எனவே நான் என்னுடைய பயிற்சியையும் இதற்கு ஏற்ற வகையிலேயே அமைத்து வந்தேன்”
இதையும் படிங்க : இந்தியா தொடரை வென்றது.. எங்களுக்கு இப்ப இது பெரிய தலைவலியா இருக்கு.. ஓகே – சூரியகுமார் யாதவ் பேட்டி
“நான் உலகக்கோப்பை ஒன்றில் விளையாட போகிறேன் என்றால் அது என்னுடைய கனவு நனவாகும் தருணமாகும். ஏனென்றால் நான் சிறுவயதில் இருந்து உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதைத்தான் கனவாக வைத்திருக்கிறேன். இந்த உலகக் கோப்பை தொடருக்காக நான் எல்லா வகையிலும் தயாராக இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.






