112 ரன்.. மீண்டும் ஏமாற்றிய சாய் சுதர்சன் படிக்கல்.. தெஆ கேப்டன் ஆக்ரோச சதம்.. கேஎல் ராகுல் பொறுமை – இந்திய ஏ அணி வெல்லுமா?

0
301
Rahul

தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து 112 முன்னிலை பெற்று இருக்கிறது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் இந்திய நட்சத்திர வீரர்களில் துருவ் ஜுரல் தவிர ரிஷப் பண்ட் வரையில் அனைவரும் ஏமாற்றினார்கள். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணிக்கு சரிவு தொடர்கிறது.

- Advertisement -

மீட்ட துருவ் ஜுரல்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணிக்கு நட்சத்திர வீரர்கள் ஏமாற்றம் தந்த நிலையில் தனி ஒரு வீரராக துருவ் ஜுரல் சிறப்பாக விளையாடி 134 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணி 255 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 221 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியது. அந்த அணிக்கு கேப்டன் ஆக்கர்மேன் அதிரடியாக விளையாடி வெறும் 118 பந்தில் 134 ரன்கள் குவித்தார். இந்திய பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 3, சிராஜ் மற்றும் ஆகாஷ் டீப் இருவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

மீண்டும் சரிவு

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணிக்கு மீண்டும் அபிமன்யு ஈஸ்வரன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஏமாற்றிய சாய் சுதர்சன் 23, படிக்கல் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். ஒரு மனையில் பொறுமையாக விளையாடிய கேஎல் ராகுல் 26 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து 112 ரன் முன்னிலை பெற்று இருக்கிறது.

இதையும் படிங்க : 2026 ஐபிஎல் தோனி ஆடுவார்.. சாம்சன் உடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்.. சிஎஸ்கே தரும் வீரர் யார்? – வெளியான தகவல்கள்

தற்போது நைட் வாட்ச்மேனாக குல்தீப் யாதவ் களம் இறங்கி இருக்க, வெளியில் ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் இருக்கிறார்கள். மேற்கொண்டு இந்திய அணி குறைந்தபட்சம் 150 ரன் எடுத்தால் வெற்றிக்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் இருக்கும். முதல் போட்டியை வென்ற இந்திய அணி இரண்டாவது போட்டியையும் வெல்லுமா? என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -