INDA vs ENGL.. 18 பவுண்டரி.. 5 சிக்ஸர்.. சர்பராஸ் கான் அதிரடி.. இந்தியா ஏ அபாரம்.. நெருக்கடியில் இங்கிலாந்து லயன்ஸ்

0
216
Sarfaraz

இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்திய ஏ அணி நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தற்பொழுது விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற இந்த தொடரின் போட்டியில் இந்திய அணி கடைசி நாளில் கடுமையாக போராடி போட்டியை டிரா செய்தது.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாசில் வெற்றி பெற்று பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் ஆகாஷ் தீப் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து முதல் நாளில் தன்னுடைய முதல் இன்னிங்ஸ் துவங்கிய இந்திய அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் அதிரடியாக அரை சதங்கள் அடித்து நல்ல துவக்கம் கொடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்கள்.

இன்று தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 58 ரன்களில் ஆட்டம் இழந்தார். தேவ்தத் படிக்கல் மிகச் சிறப்பாக விளையாடி 126 பந்துகளில் 15 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே அணியில் சேர்க்கப்பட்ட திலக் வர்மா 6, ரிங்கு சிங் 0 என சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றத்தை அளித்தார்கள்.

இந்த நிலையில் சர்பராஸ் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 160 பந்துகளில் 18 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உடன் 161 ரன்கள் குவித்து அசத்தினார். இவருக்கு வாஷிங்டன் சுந்தர் 57 ரன்கள், சவுரப் குமார் 77 ரன்கள் எடுத்து நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இந்திய ஏ அணி 493 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தற்பொழுது இந்திய ஏ அணி 351 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

இதையும் படிங்க : AUSvsWI.. மீண்டும் மாஸ் காட்டும் வெஸ்ட் இண்டீஸ்.. எதிர்பாராமல் தடுமாறும் ஆஸி.. 2வது டெஸ்டில் திருப்பம்

இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கும் நிலையில், அவருடைய இடத்திற்கு சர்ப்ராஸ் கானை தேர்வு செய்யாதது குறித்து இர்ஃபான் பதான் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சர்ப்ராஸ் கான் என்று அதிரடியாக 161 ரன்கள் குவித்து தேர்வாளர்களுக்கு தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.