தம்பி! எங்க பவுலரை ரொம்ப அடிக்காதீங்க.. ஜெய்ஸ்வாலை கிண்டல் செய்த பிரையன் லாரா

0
65

யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 175 ரன்கள் குவித்து, எதிரணி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய இளம் வீரர் முதல் நாள் ஆட்டத்தில் 173 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆனால், இரண்டாம் நாள் ஆரம்பத்தில் கேப்டன் சுப்மன் கில்லுடன் ஏற்பட்ட குழப்பத்தால் ரன்-அவுட் ஆனார். முதல் நாளில் இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இடது கை ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால், புதிய பந்தை கவனத்துடன் விளையாடினார். ஆனால், சிறப்பான பேட்டிங் மைதானத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு, தனது ஏழாவது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.

- Advertisement -

லாரா கேலி:

அவரது அற்புதமான ஆட்டத்தில் 22 பவுண்டரிகள் அடங்கியிருந்தன. பிசிசிஐ வெளியிட்ட நேர்காணலில், மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் பிரையன் லாரா, ஜெய்ஸ்வாலிடம், “எங்கள் பந்துவீச்சாளர்களை இவ்வளவு கடுமையாக தாக்க வேண்டாம்,” என்று கேலியாகக் கூறினார்.

லாரா, ஜெய்ஸ்வாலைப் பற்றி பெரிதும் பாராட்டி, அவரது 400* என்ற சாதனையை முறியடிக்கக் கூடிய வீரர்களில் ஒருவராகக் குறிப்பிட்டுள்ளார். “இதை தொடர்ந்து பேசிய ஜெய்ஸ்வால், “நான் எப்போதும் அணியை முதலில் நினைக்கிறேன். அணிக்கு எவ்வாறு பங்களிப்பது, எந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்கிறேன்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் கருத்து:

நான் செட்டாக இருந்தால், அதை முடிந்தவரை நீண்ட நேரம் தொடர முயற்சிக்கிறேன்,” என்று ஜெய்ஸ்வால் கூறினார்.மேலும், “நானும் சாய் நடுவில் பேசிக்கொண்டோம். செட்டாகிவிட்டால், நீண்ட நேரம் ஆட வேண்டும், எங்கள் ஷாட்களை ஆட வேண்டும், ஸ்ட்ரைக்கை மாற்றி ரன்கள் சேர்க்க வேண்டும் என்று முயற்சித்தோம்,” என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: 148 வருட டெஸ்ட் கிரிக்கெட்.. குல்தீப் யாதவ் படைத்த அரிய சாதனை.. கம்பீர் எடுத்த தைரிய முடிவு

இந்திய அணி, ஜெய்ஸ்வாலின் மாபெரும் சதத்தின் காரணமாக, முதல் இன்னிங்ஸில் 518-5 ரன்கள் குவித்து, இரண்டாம் நாள் இரண்டாவது செஷனில் டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 248 ரண்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்தது இதனை அடுத்து ஃபாலோ ஆனை பெற்று தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

- Advertisement -