விராட் கோலியுடன் டிரெஸ்ஸிங் ரூமில் அது பத்தி பேசறோம்.. முன்னேறிப் போய் ஆகணும் – கேஎல் ராகுல் பேட்டி

0
97
Rahul

தற்போது தென் ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்பாக விராட் கோலி உடன் டிரெஸ்ஸிங் குரூப்பில் பேச்சுவார்த்தை நடக்கிறது என கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி நாளை ஜார்கண்ட் ராஞ்சி மைதானத்தில் நடக்கிறது. மேலும் கேப்டன் கில் காயமடைந்து இருப்பதால் கே எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியுடன் பேசுகிறோம்

இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் படுதோல்வி அடைந்து விட்டது. இதன் காரணமாக அடுத்து ஒருநாள் மட்டும் டி20 தொடர்களை வென்று பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே அனுபவ வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது.

இது குறித்து கேப்டன் கேஎல்.ராகுல் பேசும் பொழுது ” பவுண்டரி அடிப்பதைப் போலவே சிங்கிள் ரன் எடுப்பதும் மிகவும் முக்கியமானது. விராட் கோலி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதை மிகவும் திறமையாக செய்திருக்கிறார். எனவே நாங்கள் முன்னேறி செல்வது குறித்து அவருடன் தொடர்ந்து ட்ரெஸ்ஸிங் ரூமில் பேசி வருகிறோம். அவர் மீண்டும் எங்களுடன் இருப்பது நல்ல விஷயம்”

- Advertisement -

எந்த ஒரு கட்டத்திலும் முக்கியம்

“எந்த ஒரு கட்டத்திலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா முக்கியத்துவம் மிகப்பெரியது. அவர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் அதிக நம்பிக்கையை உருவாக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவதற்கான ஊக்கத்தை தருகிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு நடந்ததை நாங்கள் மறக்க விரும்புகிறோம்”

இதையும் படிங்க : விராட் ரோஹித் தயவு செய்து இதை செய்ய வேண்டாம்.. பிசிசிஐ அனுப்பிய செய்தி.. அவசரக் கூட்டம் ஏற்பாடு

“ஜடேஜா எல்லாவற்றையும் செய்த ஒரு முக்கியமான வீரர். அவர் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுகிறார். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட முடியும். அவர் மீண்டும் எங்களுடன் இருப்பது நல்ல விஷயம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -