சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது.. நான் கேப்டன் கிடையாது.. பும்ரா தடாலடி பேச்சு

0
112

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, கொல்கத்தா டெஸ்டில் வாஷிங்டன் சுந்தரை நம்பர் 3 இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பிய  செயல்முறை பற்றி தனக்குத் தெரியாது என்று கூறினார். தற்போதைய தலைமை குழுவில் தான் இல்லை என்றும் கூறிய பும்ரா,இந்தக் கேள்வியை கேப்டனிடம் கேட்க வேண்டும் என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. டாஸ் தோற்று முதலில் பந்துவீசிய இந்தியா, 55 ஓவர்களில் தென்னாப்பிரிக்காவை 159 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. பும்ரா பந்துவீச்சில் அபாரமாக ஜொலித்து, 14 ஓவர்களில் 5 விக்கெட் வீழ்த்தி 27 ரன்கள் கொடுத்தார்.

- Advertisement -

நகைச்சுவை பதில்:

பதிலுக்கு இந்தியா 20 ஓவர்களில் 37-1 என்ற நிலையில் முதல் நாளை முடித்தது. கொல்கத்தா டெஸ்டின் முதல் நாளில் இந்தியா ஆடும் லெவன் பெரிய விவாத்தை ஏற்படுத்தியது. நான்கு ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய இந்தியா, ஆல் ரவுண்டர் சுந்தர் நம்பர் 3 இடத்தில் பேட்டிங் செய்தார்.

முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், சுந்தரை நம்பர் 3 இடத்துக்கு அனுப்பிய ஆச்சரியமான நடவடிக்கை குறித்து பும்ராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் நகைச்சுவையாக பதிலளித்தார். “நான் இப்போது கேப்டன் இல்லை. நிச்சயம் அதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கும்.”

- Advertisement -

எனக்கு தெரியாது:

“அந்த நபர்கள் வந்ததும் நீங்கள் அவர்களிடம் கேட்கலாம். முழு சிந்தனை செயல்முறை என்னவென்று எனக்கு உண்மையில் தெரியாது. நாங்கள் எங்கள் அனைத்து வீரர்களையும் வேலையை செய்ய ஆதரிக்கிறோம். ஆனால், அதற்கு பின்னால் என்ன உரையாடல் நடந்தது என்று எனக்குத் தெரியாது.” என்றார்.

கொல்கத்தா டெஸ்டுக்கு சாய் சுதர்சனை ஆடும் லெவனில் இருந்து நீக்கிய இந்தியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தவிர அக்ஸர் பட்டேல் மற்றும் சுந்தர் ஆகியோரையும் தேர்வு செய்தது. சுந்தர் தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸில் ஒரு ஓவர் மட்டுமே வீசினார்.  முதல் நாள் முடிவில் 38 பந்துகளில் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

எப்படி பந்துவீசினேன்:

முதல் நாள் பந்துவீச்சு குறித்து பேசிய ஜஸ்பிரீத் பும்ரா டெஸ்டின் முதல் நாளில் மைதானத்தின் தன்மை குறித்து கேட்கப்பட்டபோது,   “பந்து கடினமாகவும் நன்றாகவும் இருக்கும்போது, விலகல் சற்று விரைவாக இருக்கலாம். பந்து மென்மையாக ஆகும்போது விலகல் குறைந்தது. அப்போது நீங்கள் துல்லியமாக பந்துவீச வேண்டி வரும்.”

இதையும் படிங்க: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்திய அணி பெரும் வாய்ப்பை தவறவிட்டது.. தமிழக வீரரின் நம்பிக்கை போய்விடும்.. முன்னாள் வீரர் கருத்து

“நான் முதல் ஓவரை வீசியபோது எல்லாம் நடந்தது . பந்து ஸ்விங் ஆனது, தாழ்வாக இருந்தது. சரியான லெந்த் என்னவென்று புரிந்துகொள்வது சற்று கடினமாக இருந்தது.”  என்றார். பும்ரா தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் எடுத்த நிலையில், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை 12 ரன்களில் மார்கோ ஜேன்சனிடம் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -