தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கொண்ட தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார். கொல்கத்தாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கில் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் தற்போது ஒரு நாள் தொடரிலும் அவர் பங்கு பெறவில்லை.
இதை போன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயரும் ஒரு நாள் அணியில் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக மூன்று அதிரடி வீரர்கள் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். ஒரு நாள் அணியில் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் ஆன பந்த் திரும்பி இருக்கிறார்.
கடைசியாக 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடினார். இதேபோன்று நட்சத்திர வீரர் ருதுராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக ருதுராஜ் 117, 68 மற்றும் 25 ஆகிய ரன்களை அடித்ததால் அவருக்கு மீண்டும் ஒரு நாள் அணியில் இரண்டு ஆண்டுகள் கழித்து வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதைப்போன்று அக்சர் பட்டேல், நீக்கப்பட்டு அவருக்கு பதில் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆல்ரவுண்டர் வேகப்பந்துவீச்சாளராக நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நன்றாக விளையாடிய திலக் வருமாவுக்கும் ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்திய அணியில் ஸ்டார் வீரர்களான சிராஜ்,பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவது விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு துருவ் ஜூரல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இதையும் படிங்க:2வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுமா? அஸ்வின் தந்த அறிவுரை.. தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவிப்பு
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் நவம்பர் 30-ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி ராய்ப்பூரிலும், டிசம்பர் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் நடக்க உள்ளது.
இந்திய அணி: ரோஹித், ஜெய்ஸ்வால், கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சுந்தர், ஜடேஜா, குல்தீப், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித், ருதுராஜ், பிரசித், அர்ஷ்தீப், துருவ் ஜூரெல்