தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் பெரும் உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி, ஏறக்குறைய இரு நாட்கள் பேட் செய்து, இந்திய அணியை ஆதிக்கம் செலுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி முதல் நிகழ்ச்சியில் 489 ரன்கள் குவித்து இருக்கிறது. தற்போது இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருக்கிறது.
அஸ்வின் கருத்து:
இன்னும் 480 ரன்கள் இந்திய அணி பின்தங்கி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் முதல் இன்னிங்சில் 600 முதல் 700 ரன்கள் குவிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின், “தென்னாப்பிரிக்கா இப்போது இந்த டெஸ்டில் 5 செஷன்களைத் தட்டிச் சென்றுவிட்டது. வெற்றிக்காக இந்தியா கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மோசமான வெளிச்சம் காரணமாக இன்னொரு செஷனும் நிச்சயம் இழக்கப்படும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.”
இந்தியா என்ன செய்யனும்:
” ஸ்பின்னுக்கு எதிராக முத்துசாமியின் டிஃபென்ஸிவ் டெக்னிக் இதுவரை மிகச் சிறப்பாக இருந்தது,” என்று அஸ்வின் கூறியுள்ளார். சேனுரான் முத்துசாமி 109 ரன்கள் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.இந்திய பந்துவீச்சாளர்களை முற்றிலும் வெறுப்பேற்றிய இந்த ஆல்-ரவுண்டர், கைல் வெர்ரெய்ன், மார்கோ ஜான்சன் ஆகியோருடன் முக்கியமான பார்ட்னர்ஷிப்களை அமைத்தார்.
இதையும் படிங்க: ஒரு இந்திய ரசிகனாக சொல்கிறேன்.. ஆஸி வெல்லக் கூடாது.. அஸ்வின் கருத்து
இதேபோன்று மற்றொரு தென்னாப்பிரிக்கா வீரரான மார்க்கோ யான்சனும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 91 பந்துகளை எதிர்கொண்ட அவர் 93 ரன்கள் சேர்த்தார். இதில் ஏழு சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு வீரர் இரட்டை சதமும் இன்னொரு வீர சதமும் அடித்தாக வேண்டும்.






