இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆசஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி பரிதாபமாக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து மிகவும் வருத்தத்துடன் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பதிவு செய்திருக்கிறார்.
இந்த போட்டி நடைபெற்ற பெர்த் ஆடுகளம் பந்து இந்த போட்டி நடைபெற்ற பெர்த் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாகக் காணப்பட்டது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 132 ரன் மட்டுமே எடுத்து சுருண்டது. இந்த நிலையில் இங்கிலாந்து நிர்ணயத்தை 25 ரன் டார்கெட்டை ஆஸ்திரேலியா எட்டி ஜெயிக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிராவிஸ் ஹெட் அதிரடியில் ஆஸ்திரேலியா சுலபமாக ஜெயித்தது.
இங்கிலாந்து செய்த தவறு என்ன?
இந்தப் போட்டி நடைபெற்ற பெர்த் ஆடுகளம் முதல் நாளில் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. முதல் நாளில் இங்கிலாந்து அதிரடியாக விளையாடியது கொஞ்சம் கைக்கொடுத்தது. ஏனென்றால் பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் மெதுவாக விளையாடுவதால் ரன்கள் கிடைக்காது.
இந்த நிலையில் இரண்டாவது நாளில் விக்கெட் கொஞ்சம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாறியது. ஆனால் இதைப் புரிந்து கொள்ளாத இங்கிலாந்து தொடர்ந்து அதிரடியாக விளையாட போய் 164 ரன்களில் ஆல் அவுட் ஆகிவிட்டது. 2023 ஆம் ஆண்டு ஆசஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில், இதே மாதிரி பேட்டிங் விழிப்புணர்வு இல்லாமல் விளையாடி தோற்றது குறிப்பிடத்தக்கது. பிறகு அடுத்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அதை சரி செய்து வெற்றி பெற்றது.
மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது
இந்த நிலையில் ஆசஸ் தொடரை இந்த முறையும் பேட்டிங் விழிப்புணர்வு இல்லாமல் இங்கிலாந்து ஆரம்பித்து இருக்கிறது. இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மிகவும் கவலையுடன் பதிவு செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் டெஸ்ட்ல ODI கேப்டன்சி செஞ்சுகிட்டு இருக்காரு.. என்ன நடக்குதுனே புரியல – அனில் கும்ப்ளே விமர்சனம்
இதுபற்றி மைக்கேல் வாகன் குறிப்பிடும்போது ” 2023 ஆம் ஆண்டு ஆசஸ் தொடரின் ஆரம்பத்தில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் பெரிய தவறுகளை செய்தது. இதன் காரணமாக முதல் இரண்டு போட்டிகளையும் தோற்றது. தற்போதும் அதே மாதிரி தவறுகளை செய்கிறது. இதைப் பார்ப்பதற்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது” என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.






