ஒரு இந்திய ரசிகனாக சொல்கிறேன்.. ஆஸி வெல்லக் கூடாது.. அஸ்வின் கருத்து

0
62

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் அடித்த சதத்தை இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், புகழ்ந்து பேசியுள்ளார். பெர்த்தில் நவம்பர் 21 தொடங்கிய போட்டி, மறுநாளே முடிவடைந்தது. ஹெட் வெறும் 83 பந்துகளில் 16 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 123 ரன்கள் குவித்து அசத்தினார்.

இவரது அதிரடி ஆட்டம் ஆஸ்திரேலியாவை நான்காவது இன்னிங்ஸில் 205 ரன்கள் என்ற இலக்கை வெறும் 28.2 ஓவர்களிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. போட்டி முடிந்த பிறகு தனது யூடியூப் சேனலில் பேசிய அஷ்வின், டிராவிஸ் ஹெட்டை பாராட்டினார்.

- Advertisement -

ஆஸி வெல்ல கூடாது:

அதில், “டிராவிஸ் ஹெட் ஒரு ரோல்-ல வந்துட்டார் என்றால் இப்போதைய கிரிக்கெட் உலகில் அவரை விட அதிக போட்டிகளை வெல்ல வைக்கிறவர் யாரும் இல்லைன்னு எனக்குத் தோனுகிறது. டிராவிஸ் ஹெட் ஜோன்ல இருந்து ஆட ஆரம்பித்தால், உலக கிரிக்கெட்டில் அதிகமான போட்டிகள் அந்த டீமுக்கு வந்துடும். இது ரொம்ப பெரிய ஸ்டார் சாதனை.”

“இந்திய ரசிகனாக, இந்திய கிரிக்கெட் நலன் விரும்பியாக சொல்கிறேன். ஆஸ்திரேலியா அதிகம் ஜெயிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.ஆனால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் டிராவிஸ் ஹெடை கேப்டனாக்கி விச கூடாது என்று நான் ரொம்ப நம்புகிறேன்.”

- Advertisement -

ஹெட்க்கு கேப்டன் பதவி:

“அவர் கேப்டனாக மாறினால் என்னெல்லாம் சாதிப்பார் என்று தெரியவில்லை. தலைமைத்துவத்துக்கு தேவையான எல்லா குணங்களும் அவரிடம் இருக்கிறது. பேட்டிங்கில் ஊக்கம் கொடுக்கின்ற ஒரு உத்வேகத்தை அவரால் அணியை இழுத்துச் செல்ல முடியும். முதலில் ஒரு பிரான்சைஸ் டீமுக்கு கேப்டனாக வரலாம், பிறகு ஆஸ்திரேலியாவுக்கு வரலாம். பார்ப்போம்”

இதையும் படிங்க: வீட்டிலா விளையாடுற.. சீக்கிரம் பந்து வீசு.. குல்தீப் யாதவை திட்டிய ரிஷப் பண்ட்.. என்ன நடந்தது?

இந்த தொடர் முழுவதும் இங்கிலாந்தை டிராவிஸ் ஹெட் துவம்சம் செய்ய போகிறார் என்று அஸ்வின் கூறினார். டிராவிஸ் ஹெட் இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 42.34 சராசரியுடன் 4,107 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 20 அரைசதங்களும் 10 சதங்களும் அடங்கும். ஒட்டுமொத்தமாக டிராவிஸ் ஹெட் 187 போட்டிகளில் ஆடி 40.14 சராசரியுடன் 8,311 ரன்கள் குவித்துள்ளார். இதில் 42 அரைசதங்களும் 17 சதங்களும் அடங்கும்.

- Advertisement -