நேற்று இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு இந்தியாவின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் முக்கியமான அறிவுரை ஒன்றை கூறியிருக்கிறார்.
நடப்பு ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் அபிஷேக் ஷர்மா 39 பந்துகளில் அதிரடியாக 74 ரன்கள் குவித்தது இன்று இந்தியா முழுவதும் மிகப்பெரிய செய்தியாக இருக்கிறது.
போட்டிக்குப் பிறகு நடந்த சம்பவம்
நேற்றைய போட்டிக்குப் பிறகு கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அபிஷேக் சர்மாவை வீரேந்தர் சேவாக் உடன் ஒப்பிட்டு பேசினார்கள். இதற்கு அடுத்து வீரேந்தர் சேவாக் அபிஷேக் ஷர்மாவுக்கு மிக முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கினார்.
தன்னை வேறு எந்த சேவாக்வுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பதில் அளித்த அபிஷேக் ஷர்மா ” சேவாக் பைய்யா எதிர்த்து விளையாடி அடித்த பாகிஸ்தான் பவுலர்களைப் போல தற்போதைய பாகிஸ்தான் பவுலர்கள் திறமையானவர்கள் இல்லை” என்று கூறினார். இது வீரேந்தர் சேவாக்கை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியது.
சேவாக் தந்த அறிவுரை
இதைத்தொடர்ந்து சேவாக் அபிஷேக் சர்மாவுக்கு அறிவுரை கூறும் பொழுது “நீங்கள் 70 80 ரன்கள் எடுக்கும் போதெல்லாம் அதை சதமாக மாற்ற தவறி விடாதீர்கள் என்று என்னிடம் சுனில் கவாஸ்கர் கூறினார். நீங்கள் ஓய்வு பெறும் பொழுது இப்படி சதம் அடிக்காமல் விட்ட 70 மற்றும் 80 ரன்கள் குறித்து சிந்திப்பீர்கள்”
இதையும் படிங்க : எங்க பாக் கேப்டன் திலக் வர்மா இடத்துக்கு கூட வர முடியாது.. ரொம்ப பலவீனமான ஆளு – அக்தர் விமர்சனம்
“அதே நேரத்தில் இந்த ரன்களை எல்லாம் நீங்கள் சதமாக மாற்றி இருந்தால், உங்கள் வாழ்க்கையில் இன்னும் பல சதங்கள் கிடைக்கும். ஏனென்றால் உங்களுக்கு இந்த வாய்ப்பு மீண்டும் மீண்டும் கிடைக்காது. நீங்கள் பேட்டிங் செய்யும்பொழுது அது உங்களுடைய நாளாக இருந்தால் நீங்கள் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருக்க பாருங்கள்” என்று கூறினார்.






