இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி.. எந்த  வீரர்களுக்கு வாய்ப்பு.. 15 பேர் கொண்ட உத்தேச பட்டியல்

0
23

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்களை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சூழலில் ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடரில் எந்தெந்த இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்க கூடும். ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், அவருக்கு இங்கிலாந்து தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படும். இதேபோன்று ரோகித் சர்மா தற்போது நல்ல பார்மில் இருப்பதால் அவர் மீதும் தேர்வு குழுவினர் நம்பிக்கை வைப்பார்கள்.

- Advertisement -

பேட்ஸ்மேன்கள் பட்டியல்:

மூன்றாவது இடத்தில் கில் தேர்வு செய்யப்படுவார். கில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் நன்றாக விளையாடி இருப்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். நான்காவது வீரராக விராட் கோலி களமிறங்குவார். விராட் கோலி ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஐந்தாவது வீரராக கே எல் ராகுல் இடம் பெறுவார். தற்போது நல்ல பார்மில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறாவது வீரராக பண்டிற்கு வாய்ப்பு வழங்கப்படும்.  பண்ட் ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடிய அனுபவம் உடையவர். ஏழாவது வீரராக கருண் நாயர், ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சாய் சுதர்சன் என மூன்று வீரர்கள் போட்டி போடுகிறார்கள்.

- Advertisement -

பவுலிங் படை:

இந்த மூன்று வீரர்களுமே 15 பேர் கொண்ட அணியில் நிச்சயம் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று சுழற் பந்துவீச்சாளர்களாக அக்சர் பட்டேல் மற்றும் குல்திப் யாதவ் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. இதே போன்று மூன்று வேகப்பந்துவீச்சாளராக பும்ரா, சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. இந்த மூன்று வீரர்களுமே தற்போது ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் இருக்கின்றார். இதேபோன்று 15 வது வீரராக சமி இடம்பெற கூடும் என்று தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஸ்ரீசாந்துக்கு 3 ஆண்டுகள் தடை.. கேரள கிரிக்கெட் சங்கம் அதிரடி.. சாம்சன் தந்தைக்கும் சிக்கல்.. காரணம் என்ன?

உத்தேச பட்டியல்: 1, ஜெய்ஸ்வால், 2.ரோகித் சர்மா. 3, சுப்மன் கில், 4. விராட் கோலி, 5. கேஎல் ராகுல், 6. ரிஷப் பண்ட், 7.ஸ்ரேயாஸ், 8. அக்சர் பட்டேல், 9. பும்ரா, 10. சிராஜ், 11. பிரசித் கிருஷ்ணா, 12. முகமது ஷமி ,13. குல்தீப் யாதவ், 14. கருண் நாயர், 15. சாய் சுதர்சன்

- Advertisement -