இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விராட் கோலி, ரோகித் சர்மா அஸ்வின் ஆகியோர் ஓய்வு பெற்றவர்களில் தற்போது புதிய வீரர்கள் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் முதல் டெஸ்டில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அதில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கே எல் ராகுல் ஆகியோர் களமிறங்குகிறார்கள்.இது குறித்து பேசிய அவர், தொடக்க வீரர்கள் குறித்து கவலை இல்லை.
பிளேயிங் லெவன் என்ன?
ஏனென்றால் இந்த இருவருமே பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பாகவிளையாடியிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ஜெய்ஸ்வாலுக்கு இது முதல் இங்கிலாந்து தொடராகும். இதில் அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்.கேஎல் ராகுலும் கடந்த முறை நன்றாகவே விளையாடுகிறார். எனவே இந்த தொடரில் இந்தியா சிறப்பாக செயல்பட வேண்டும்.மூன்றாவது வீரராக சாய் சுதர்சன் அல்லது படிக்கல் ஆகியோரை சேர்க்க வேண்டும்.
இந்த பந்தயத்தில் படிக்கல் கொஞ்சம் முன்னிலையில் இருக்கின்றார்.ஏனென்றால் பார்டர் கவாஸ்கர் தொடரில் அவர் விளையாடினார். தர்மசாலா டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடி இருந்தார். இதனால் சாய் சுதர்சனை விட படிக்கல்தான் முன்னிலையில் இருப்பதாக நினைக்கின்றேன். ஆனால் சாய் சுதர்சன் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவருக்கும் வாய்ப்பை பெறலாம்.இதனால் நான்காவது வீரராக கில்லை களமிறக்க வேண்டும்.
கேப்டன், பவுலர்கள் யார்?
கில் கேப்டனாக வர அதிக வாய்ப்பு இருக்கிறது. பிசிசிஐ தரப்பு செய்திகளும் அதை தான் சொல்கின்றது. எனவே அவர் நான்காவது வீரராக களம் இறங்குவார் என்று நம்புகிறேன். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அவர் நன்றாக செயல்பட முடியும்.ஐந்தாவது வீரராக ரிஷப் பண்ட் செயல்படுவார். நிதிஷ்குமார் ரெட்டிக்கு ஆறாவது வீரராக வாய்ப்பு வழங்கப்படும்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: திரும்ப தொடங்கும் முதல் போட்டியே மழை.. கேகேஆர் ஆர்சிபி போட்டி நடக்குமா.? முழு விவரம்
ஆனால் கருண் நாயர் சர்பராஸ் கான், துருவ் ஜூ என்ற பல வீரர்கள் ஆறாவது இடத்திற்காக போட்டி போடுவார்கள். ஆனால் நிதிஷ் குமார் சதம் அடித்ததால் அவருக்கு தான் அந்த வாய்ப்பை நான் தருவேன். இதுபோன்று அஸ்வின் இல்லாததால் ஜடேஜாவுக்கு அந்த வாய்ப்பு தர வேண்டும். வாஷிங்டன் சுந்தரும் அணியில் இருக்கலாம். சர்துல் தாக்கூர், சமி, சிராஜ் ஆகியோர் பவுலராக இருக்கலாம். கூடுதல் பவுலராக பிரசித் கிருஷ்ணா அல்லது ஆர்ஸ்தீப்பை சேர்க்கலாம் என்று ஆகாஷ் கூறியுள்ளார்.






