விராட் கோலியின் பெயரை காப்பாற்றனும்.. அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான்.. மாண்டி பனேசர் கருத்து

0
105

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் இந்திய அணி இந்த தொடரில் விளையாடுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இங்கிலாந்து அணியில் முன்னாள் வீரர் மாண்டி பனேசர், “கோலியின் பெயரை இளம் இந்திய அணி வீரர்கள் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், விராட் கோலி ஒரு மாபெரும் பெயரை உருவாக்கி இருக்கிறார். அவருடைய கௌரவத்தை இந்த இந்திய அணி வீரர்கள் காப்பாற்ற வேண்டும்.”

- Advertisement -

கோலி பெயரை காப்பாற்றுங்க:

“கோலி ஆடிய டெஸ்ட் கிரிக்கெட் விதத்தை இந்திய வீரர்களும் பின்பற்ற வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இந்திய அணியில் தற்போது பல திறமை வாய்ந்த இளைஞர்கள் இருக்கிறார்கள்.அதில் குறிப்பாக, சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக விளையாடி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கொஞ்சம் கூட பயமின்றி அபாரமாக விளையாடுகிறார்.”

“இங்கிலாந்து ஆடுகளங்களில் அவர் சிறப்பாக விளையாடிய அனுபவம் கொண்டவர். சர்ரே அணிக்காக அவர் பல சிறப்பான எண்ணங்களின் ஆடி இருக்கின்றார்.இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வருவதற்கு சாய் சுதர்சனுக்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது.விராட் கோலி எந்த பணியை செய்தாரோ அதனை சாய் சுதர்சனம் நிச்சயம் செய்வார் என்று தான் நம்புகிறேன்” என்று மாண்டி பனேசர் கூறியுள்ளார்.

- Advertisement -

சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?:

சாய் சுதர்சன் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 29 ஆட்டங்களில் விளையாடி மொத்தமாக 1957 ரன்கள் அடித்து இருக்கின்றார். இன்னும் தற்போது அபிமன்யு ஈஸ்வரன் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் மூன்றாவது வீரராக களம் இறங்கி 80 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து தொடரில் இந்தியாவுக்கு முக்கிய பவுலர் இவர் தான்.. WTC பைனலிலி ஆஸி. வெல்லும்- ஹைடன் கணிப்பு

இதனால் சாய் சுதர்சன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சாய் சுதர்சன் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தான் இடம் கிடைக்கும் என தெரிகிறது. ஜெய்ஸ்வால் இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளிலும் பெரிய அளவு சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அபிமன்யூ ஈஸ்வரனை தொடக்க வீரராக களம் இறக்கிவிட்டு சாய் சுதர்சனுக்கு மூன்றாவது இடத்தில் களம் இறங்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்

- Advertisement -