தாயா? நாடா? பயிற்சியாளர் கம்பீர் எடுத்த முக்கிய முடிவு.. இந்திய அணியில் நிகழ்ந்த மாற்றம்

0
167

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக மீண்டும் இங்கிலாந்து திரும்பி இருப்பது, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கம்பீர், தனது தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, ஐசியு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் இந்தியாவுக்கு திரும்பியிருந்தார்.

இந்த சூழலில் கம்பீரின் தாயார் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்றாலும், அவரது உடல்நிலை மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. , இதனால் தலைமை பயிற்சியாளர் கம்பீர், அணியுடன் மீண்டும் இணைய இங்கிலாந்து திரும்பியுள்ளார்.

- Advertisement -

பயிற்சி முகாம்க்கு வந்தார்:

போட்டி நாளுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்திய அணி ஜூன் 18 அன்று முதல் பயிற்சி செஷனுக்காக மைதானத்திற்கு வந்தது. அப்போது, கம்பீரும் வீரர்களுடன் காணப்பட்டார்.

இது இந்திய அணிக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் அனுபவமற்ற வீரர்கள் இருப்பதால், பயிற்சியாளராக கம்பீரின் பங்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணியில் கூடுதல் வீரர்:

இதனிடையே, முதல் டெஸ்டிற்கு முன்னதாக இந்திய அணி ஹர்ஷித் ராணாவை தங்கள் அணியில் சேர்த்தது. முதல் அணியில் உள்ள சில வீரர்களுக்கு காயம் காரணமாக வெளியேறினால், அவருக்கு பதிலாக ஹர்சித் ராணா சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. இந்தியா ஏ அணிக்காக இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் மூத்த அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்ற ராணா, சுற்றுப்பயணம் முடிந்த பிறகும் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இதையும் படிங்க: இந்தியா முதல் டெஸ்ட்.. மெக்கலம் ஸ்டோக்ஸ் கேட்டதை தர முடியாது.. ஆடுகள தயாரிப்பாளர் அதிரடி பேட்டி

இந்திய அணி (முதல் டெஸ்ட் மட்டும்): ஷுப்மன் கில், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூர், அபிமன்யு ஈஸ்வரன், பி. சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜூரல், ஹர்ஷித் ராணா

- Advertisement -