இங்கிலாந்துக்கு சென்று பவரை காட்டும் கம்பீர்.. ஏமாற்று வேலைக்கு முற்றுப்புள்ளி.. என்ன நடந்தது?

0
406

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி படுதோல்வியை  தழுவிய  நிலையில் இங்கிலாந்தில் சாதிக்க வேண்டிய உத்வேகத்தில் கம்பீர் தலைமையிலான அணி இறங்கி இருக்கிறது.

இந்திய அணியில் எடுக்கப்படும் முடிவுக்கு கம்பீருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த தருணத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா, முகமது சமி, அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் முற்றிலும் இளம் வீரர்களை வைத்து கம்பீர் ஒரு படையை உருவாக்கி இருக்கிறார்.

- Advertisement -

பயிற்சி ஆட்டத்திற்கு தயார்:

இந்த தருணத்தில் எப்போதெல்லாம் வெளிநாட்டுக்கு சென்று இந்திய அணி ஒரு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறதோ அப்போதெல்லாம் அதற்கு தயாரிக்கப்படும் ஆடுகளம் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அதாவது தொடருக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளத்திற்கும் பயிற்சி ஆட்டத்திற்கு வழங்கப்படும் ஆடுகளத்திற்கும் எந்த ஒரு ஒற்றுமையும் இருக்காது.

இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் சரியான முறையில் பயிற்சி எடுக்கக் கூடாது என்ற விஷயத்தில் வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இருக்கும். இந்த நிலையில் இதுவரை சென்ற பயிற்சியாளர்கள் எல்லாம் எந்த ஆடுகளம் கிடைக்குதோ, அதை வைத்து தான் பயிற்சியில் ஈடுபடுவார்கள். ஆனால் கம்பீர் தற்போது இதற்கு முடிவுரை கட்டி இருக்கிறார்.

- Advertisement -

ஆடுகள நிபுணர்களுடன் ஆலோசனை:

இங்கிலாந்தில் உள்ள கெண்ட் கிரிக்கெட் கிளப்பில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.இதற்கு எந்த மாதிரியான ஆடுகளம் வேண்டும் என்பதை ஆடுகள நிபுணர்களுடன் கம்பீர் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்க்கலும்  பங்கேற்று இருக்கிறார்.

இதையும் படிங்க: WTC பைனல்.. இங்கிலாந்து ரசிகர்கள் எங்களுக்கு இதை செஞ்சா.. நான் ஆச்சரியப்பட மாட்டேன் – ஆஸி கேப்டன் கம்மின்ஸ்

இதில் தங்களுக்கு எந்த மாதிரி ஆடுகளம் வேண்டும். புற்கள் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து எல்லாம் கம்பீர் அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.
நாங்கள் கேட்ட ஆடுகளம் மட்டும் தான் வேண்டும் என்றும் இல்லை என்றால் பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்து விடுவோம் என்பது போல் கம்பீர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.கம்பீரின் அறிவுறுத்தலை அடுத்து கெண்ட் ஆடுகளம் தயாரிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

- Advertisement -