இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரில் இன்று தொடங்கியது. விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்கும் டெஸ்ட் போட்டி என்பதால் இளம் வீரர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
ஹெட்டிங்லி மைதானம் ஆட்டத்தின் முதல் நாளில் முதல் ஸ்செஷனில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசியாக இந்த மைதானத்தில் நடைபெற்ற ஆறு டெஸ்ட் போட்டிகளில் முதலில் பந்துவீசிய அணியே வெற்றி பெற்றது. இதனால் டாஸ் வென்ற உடனே கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
விக்கெட் எடுக்க தீவிரம்:
இங்கிலாந்து அணியின் வேகபந்துவீச்சாளர்களான ஓக்ஸ், ஜோஸ் டாங்க் மற்றும் பிரைடன் கர்ஸ் ஆகியோர் இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என ஸ்டோக்ஸ் எதிர்பார்த்தார். ஆனால் ஜெய்ஸ்வாலும், ராகுலும் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். அபாயகரமான பந்துகளை தொடவே இல்லை.
இதனால் முதல் ஒரு மணி நேரத்தில் 14 ஓவர் முடிவில் இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்திருந்தது. அப்போதுதான் தொடக்க ஜோடியின் விக்கெட்டை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என ஒரு ஃபுல் லெங்த் பந்தை வீசினார். அந்த பந்து ஜெய்ஸ்வாலின் காலில் பட்டது.
டிஆர்எஸ் கேட்ட இங்கிலாந்து:
இதனை அடுத்து இங்கிலாந்து வீரர்கள் அவுட் கேட்டனர். ஆனால் இதற்கு நடுவர் அவுட் வழங்கவில்லை. ஆனால் விக்கெட்டை எப்படியாவது எடுக்க வேண்டும் என ஆசைப்பட்ட இங்கிலாந்து வீரர்கள் இதற்கு டி ஆர் எஸ் கேட்டனர். அப்போது ரிப்ளேவில் பந்து ஸ்டம்புக்கு வெளியே சென்றது தெரிய வந்தது.
இதையும் படிங்க: இங்கி முதல் டெஸ்ட்.. சாய் சுதர்சன் அறிமுகம்.. கம்பீர் துல்லிய திட்டம்.. சின்ன அதிர்ஷ்டம் தவறியது
இதனால் இது நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் ஒரு ரிவ்யூவும் சென்றது. கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் drs கேட்டு விட்டோமே என்று வெட்கத்தில் ஸ்டோக்ஸ் தனது முகத்தை மூடிக்கொண்டார். விக்கெட் எடுக்க வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து ஆசைப்பட்டு மொக்கை வாங்கி விட்டதாக ரசிகர்களும் குற்றச்சாட்டினர்.






